இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மந்தநிலையால் நடப்பு நிதியாண்டின் வளர்ச்சியானது 6.8 சதவிகிதத்திலிருந்து 6.1 சதவிகிதமாக குறையும் என்று சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது.
உலக பொருளாதார வளர்ச்சி குறித்து சர்வதேச நாணய நிதியம் ஒவ்வொரு ஆண்டும் அறிக்கை வெளியிட்டு வருகிறது. அந்தவகையில் நடப்பு நிதி ஆண்டில் உலக பொருளாதார வளர்ச்சி சரிவை சந்திக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
அதன்படி உலகளாவிய பொருளாதார வளர்ச்சியானது 2022-ஆம் ஆண்டில் இருந்த 3.4 சதவிகிதத்திலிருந்து 2023-ஆம் ஆண்டு 2.9 சதவிகிதமாக குறையும். பின்னர் 2024-ஆம் ஆண்டு 3.1 சதவிகிதமாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் 2022-ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார மந்தநிலைக்கு பிறகு ஆசியாவின் வளர்ச்சியானது 2023 மற்றும் 2024-ஆம் ஆண்டுகளில் 5.3 சதவிகிதம் அல்லது 5.2 சதவிகிதமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை பொருளாதார இயக்குனர் பியர் ஆலிவியர் கௌரிஞ்சாஸ் கூறும்போது, “இந்தியாவின் வளர்ச்சி குறித்து அக்டோபர் மாதம் நாங்கள் வெளியிட்ட கருத்துக்கணிப்புகளில் எதுவும் மாறவில்லை.
இந்தியாவின் நடப்பு நிதியாண்டின் 6.8 சதவிகித வளர்ச்சியானது மார்ச் மாதத்திற்கு பிறகு 2023-ஆம் நிதியாண்டில் 6.1 சதவிகிதமாக சரிவை சந்திக்கும். 2024-ஆம் ஆண்டு இந்தியாவின் வளர்ச்சியானது 6.8 சதவிகிதமாக உயரும்.” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
நாதகவில் சேர திருமகன் ஈவெரா சென்றாரா? சீமானுக்கு ஜோதிமணி பதில்!
Comments are closed.