ஜார்கண்ட் மாநிலத்தில் இரண்டாம் கட்ட சட்டமன்ற தேர்தல் இன்று (நவம்பர் 20) நிறைவடைந்ததை அடுத்து தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் முடிவுகள் வெளியாகியுள்ளன.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் உள்ள 81 சட்டமன்ற தொகுதிகளுக்கு இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.
இதில் காங்கிரஸ், ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா உள்ளிட்ட கட்சிகள் இணைந்து ஒரு கூட்டணியாகவும், பாஜக எதிரணியாகவும் தேர்தலில் போட்டியிட்டன.
நவம்பர் 13 ஆம் தேதி நடந்த 43 தொகுதிகளுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவில் 64.86 சதவீத வாக்குகள் பதிவானது.
அதனைத்தொடர்ந்து இன்று இரண்டாம் கட்டமாக 37 தொகுதிகளுக்கு 14,218 வாக்குச்சாவடிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.
காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு, மாலை 6 மணிக்கு நிறைவடைந்த நிலையில் 67.59 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் 81 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தலில் வெற்றி பெற 41 இடங்கள் தேவை.
இந்த நிலையில் தற்போது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் :
Chanakya
பாஜக – 45-50
காங்கிரஸ் – ஜே.எம்.எம் – 35-38
மற்றவை – 3-5
Matrize
பாஜக – 42-47
காங்கிரஸ் – ஜே.எம்.எம் – 25-30
மற்றவை – 1-4
Axis My India
பாஜக – 25
காங்கிரஸ் – ஜே.எம்.எம் – 53
மற்றவை – 3
People Pulse
பாஜக – 44-53
காங்கிரஸ் – ஜே.எம்.எம் – 25-37
மற்றவை – 5-9
Polls of Polls
பாஜக – 40
காங்கிரஸ் – ஜே.எம்.எம் – 38
மற்றவை – 3
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா