கலால் வரி உயர்வு இன்று முதல் அமல்.. சிகரெட், புகையிலை பொருட்கள் விலை உயர்வு

Published On:

| By Mathi

Cigarette

நாடு முழுவதும் இன்று பிப்ரவரி 1-ந் தேதி கலால் வரி உயர்வு அமலுக்கு வருகிறது. இதனையடுத்து சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களின் விலை கணிசமாக உயருகிறது.

நாடாளுமன்றத்தில் கலால் வரி உயர்வு மசோதாக்களை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மத்திய அரசு தாக்கல் செய்தது. இதனையடுத்து கலால் வரி உயர்வு இன்று முதல் நாடு முழுவதும் அமலாகிறது.

ADVERTISEMENT

இதனால் சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களின் விலை உயர்வும் அமலுக்கு வருகிறது.

சிகரெட்டுகளைப் பொறுத்தவரையில் ரூ2.05-ல் இருந்து ரூ8.50 வரை கூடுதலாக வரி விதிக்கப்படுகிறது. இதனால் சில்லறை விற்பனை கடைகளிலும் சிகரெட் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

குட்கா, ஜர்தா, புகையிலைக்கான வரி பலமடங்கு உயர்த்தப்பட்டுள்ளதால் இவற்றின் விலையும் பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share