சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து முன்னாள் அமைச்சர் பொன்முடி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற சூமோட்டோ வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை, பிப்ரவரி 19 – 23 வரை நடைபெற இருந்த நிலையில் மார்ச் 12 – 15 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
சொத்துக்குவிப்பு வழக்குகளில் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, ஐ.பெரியசாமி, முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, வளர்மதி முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை கீழமை நீதிமன்றங்கள் விடுவித்தன.
இந்த தீர்ப்புகளை மறு ஆய்வு செய்யும் வகையில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தார்.
அமைச்சர்கள் மீதான வழக்குகளில் பிப்ரவரி 12-ஆம் தேதி முதல் இறுதிக்கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது. ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வழக்கின் விசாரணை நிறைவடைந்துள்ளது. அந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பொன்முடிக்கு எதிரான வழக்கில் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை விசாரணை நடைபெறும் என்று தேதி அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், சூமோட்டோ வழக்கில் பொன்முடிக்கு எதிரான இறுதிக்கட்ட வழக்கு விசாரணையை பிப்ரவரி 19 முதல் 23-ஆம் தேதிக்கு பதிலாக, மார்ச் 12 முதல் 15-ஆம் தேதிக்கு மாற்ற மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ கோரிக்கை வைத்தார்.
அவரது கோரிக்கையை ஏற்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பொன்முடி மீதான வழக்கு விசாரணை மார்ச் 12 முதல் 15 வரை நடைபெறும் என்று அறிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
”உண்மை சம்பவம்” : SK 21 படத்தின் கதை இதுதானா?
அமலாக்கத்துறை வழக்கில் ஆவணங்கள் திருத்தம்: செந்தில் பாலாஜி தரப்பு வாதம்!