தமிழ்நாடு மாநில தகவல் ஆணையத்தின் தலைமை ஆணையராக பணியாற்றி ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராஜகோபால், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் இன்று (மே 31) பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார். இந்த நிகழ்வின் போது பாஜக மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன், துணை தலைவர்கள் வி.பி.துரைசாமி, கரு.நாகராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.
இதுதொடர்பாக நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில்,
“நாட்டின் நிர்வாகத் துறையில் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய ராஜகோபால், பல்வேறு பொறுப்புகளை வகித்து, பல துறைகளில் ஆழ்ந்த அனுபவத்தைப் பெற்றவர். ஒரு நேர்மையான நிர்வாகியாகவும், நுண்ணறிவுடன் முடிவெடுப்பவராகவும் தமிழகத்தின் வளர்ச்சிக்காகப் பாடுபட்டவர். Ex ias officer rajagopal joined bjp

மோடி தலைமையில் நாடு காணும் புதிய வளர்ச்சிக்கு படித்தோர், அறிந்தோர், நேர்மையாளர், திறமைமிக்க இளைஞர்கள் அனைவரும் கட்சியில் சேர்ந்து பங்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
நாட்டுக்காகவும், தமிழகத்தின் நலனுக்காகவும், நம்முடன் அவரது பயணம் தொடர வாழ்த்துகிறேன். பாஜகவுக்கு நல்ல ஆலோசனைகளை வழங்குவார்” என்று தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்ட ஆட்சியர், ஆளுநரின் ஆலோசகர் என பல்வேறு பதவிகளில் பணியாற்றியுள்ளார் ராஜகோபால். கடந்த 2019-ஆம் ஆண்டு அப்போதைய காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். பின்னர் காங்கிரஸில் இருந்து விலகிய நிலையில், தற்போது பாஜகவில் இணைந்துள்ளார். Ex ias officer rajagopal joined bjp