யாரும் எதிர்பாராவிதமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின், முன்னாள் வீரர் ஒருவர் தீவிர அரசியலில் இறங்கியுள்ளார்.
ஐபிஎல் தொடரை பொறுத்தவரை சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான அணியாக உள்ளது.
சென்னை அணிக்காக விளையாடும் வீரர்கள் ஒரே குடும்பம் என்னும் உணர்வினை ரசிகர்களுக்கும் அளித்து விடுகின்றனர். இதனால் அவர்கள் என்ன செய்தாலும் அது வைரலாகி விடுகிறது.
వైసీపీ లో చేరిన అంబటి రాయుడు
#ambatirayudu #ysjagan #ysrcp #ysrcpofficial #csk #cricketer #pakvsaus #indvssa #rohitsharma pic.twitter.com/znC7vrNvlU
— Andhrula Vaani (@AndhrulaVaani) December 29, 2023
அந்த வகையில் சென்னை அணியின் முன்னாள் வீரர் அம்பாதி ராயுடு, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.
ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, துணை முதல்வர் நாராயண சாமி, எம்பி பத்திரெட்டி மிதுன் ரெட்டி ஆகியோர் அவருக்கு சால்வை மற்றும் கட்சியின் துண்டு போர்த்தி வரவேற்றனர்.
வருகின்ற 2024 நாடாளுமன்ற தேர்தலில் அம்பாதி ராயுடு, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சார்பாக தேர்தலில் போட்டியிட போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னை அணி 2023-ம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்ற கையோடு, அம்பாதி ராயுடு தன்னுடைய ஓய்வை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
-மஞ்சுளா
விஜயகாந்த் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள அனுமதி மறுப்பு: தொண்டர்கள் சாலை மறியல்!
