ADVERTISEMENT

கிச்சன் கீர்த்தனா:  டீ டைம் க்ராக்கர்ஸ்

Published On:

| By Minnambalam

‘போரடிக்குது. ஏதாவது ஸ்நாக்ஸ் வேணும். ஆன்லைனில் ஆர்டர் பண்ணுங்க’ –  பள்ளியில் இருந்து வரும் குழந்தைகள் மட்டுமல்ல; அலுவலகம் முடிந்து வரும் பெரியவர்கள் பலரின் விருப்பம் இதுவாகவே இருக்கிறது. டி.வி பார்க்கும்போது, சும்மா இருக்கும் நேரங்களில் நொறுக்குத் தீனி கேட்டு நச்சரிக்காத பிள்ளைகளே இல்லை. இதில் பெரியவர்களும் விதிவிலக்கு அல்ல. இப்படிப்பட்டவர்களுக்கு வீட்டிலேயே தயாரித்து, அவர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்ய இந்த டீ டைம் க்ராக்கர்ஸ் உதவும்.

என்ன தேவை?  
கோதுமை மாவு – ஒரு கப்  
கடலை மாவு, கேழ்வரகு மாவு – தலா கால் கப்  
மஞ்சள்தூள், சீரகம், எள் – தலா அரை டீஸ்பூன்  
ஓமம் – கால் டீஸ்பூன்  
மிளகுத்தூள் – அரை டீஸ்பூன்  
புதினா, கொத்தமல்லித்தழை – சிறிதளவு  
இஞ்சி – பச்சை மிளகாய் விழுது – அரை டீஸ்பூன்  
எண்ணெய், உப்பு – தேவையான அளவு

ADVERTISEMENT

எப்படிச் செய்வது?
புதினா, கொத்தமல்லித்தழையைப் பொடியாக நறுக்கவும். ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, கடலை மாவு, கேழ்வரகு மாவு, ஓமம், மிளகுத்தூள், உப்பு, இஞ்சி – பச்சை மிளகாய் விழுது, மஞ்சள்தூள், சீரகம், எள், புதினா, கொத்தமல்லித்தழை ஆகியவற்றை சேர்த்துப் பிசறவும். பிறகு தண்ணீர்விட்டுக் கெட்டியாகப் பிசையவும். பிசைந்த மாவை மெல்லிய சப்பாத்திகளாகத் தேய்த்து டைமண்ட் வடிவத்தில் வெட்டி எடுக்கவும். எண்ணெயைக் காயவிட்டு வெட்டிய துண்டுகளைப் போட்டுப் பொரித்தெடுக்கவும்.

அரிசி உணவுகளைத் தவிர்ப்பது ஆரோக்கியமானதா?

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share