தங்கம் விலை இன்று மாலை மீண்டும் சவரனுக்கு ரூ.920வரை அதிரடியாக உயர்ந்துள்ளது.
வரலாற்றில் முதல் முறையாக அக்டோபர் 17ம் தேதி ரூ.97,600-க்கு விற்பனையானது. ஆனால் தீபாவளிக்கு பின் தங்கம் விலை படிப்படியாக குறைந்து வந்தது. அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் ரூ.3000 வரை குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.88,600க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று காலை ஒரு சவரன் தங்கம் ரூ.1,080 வரை உயர்ந்து ரூ.89,680 க்கு விற்பனை செய்யப்பட்டது.
தற்போதைய தங்கம் விலை
சென்னையில் இன்று (அக்டோபர் 29) மாலை ஒரு கிராம் தங்கம் ரூ.115 வரை உயர்ந்து ரூ.11325க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.920 உயர்ந்து ரூ.90,600க்கு விற்பனை செய்யப்படுகிறது.நேற்று ஒரு சவரன் தங்கம் ரூ.3000 குறைந்த நிலையில் இன்று ரூ.2000 உயர்ந்துள்ளது.
தற்போதைய வெள்ளி விலை
சென்னையில் இன்று காலை ஒரு கிராம் வெள்ளி ரூ.1 உயர்ந்து மாலையில் மாற்றமின்றி ரூ.166க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.1,66,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம்
| 28 -10-2025 | 88,600 |
| 27-10-2025 | 91,600 |
| 26-10-2025 | 92,000 |
| 25-10-2025 | 92,000 |
| 24-10-2025 | 91,200 |
| 23-10-2025 | 92,000 |
| 22-10-2025 | 92,320 |
| 21-10-2025 | 96,000 |
| 20-10-2025 | 95,360 |
| 19-10-2025 | 96,000 |
