பட்ஜெட்டில் தமிழ்நாட்டின் பெயர் கூட இடம் பெறாதது ஏன் என்று முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். Even tamilnadu name not in budget
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (ஜனவரி 1) பட்ஜெட் தாக்கல் செய்தார். இந்த நிதியாண்டின் மொத்த பட்ஜெட் மதிப்பு ரூ.50,65,345 கோடி ஆகும். இது கடந்த ஆண்டை காட்டிலும் அதிகமாகும். 2024ஆம் நிதியாண்டின் பட்ஜெட் மதிப்பு 47.16 லட்சம் கோடி ஆகும்.
இந்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு எந்த அறிவிப்பும் வெளியாகாத நிலையில், இதுகுறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின்,
“ஒன்றிய நிதிநிலை அறிக்கை என்றாலே தமிழ்நாட்டைப் பொருத்தவரை ஓரவஞ்சனைதானா? தமிழ்நாடு என்ற பெயர்கூட தொடர்ந்து இடம்பெறுவதில்லையே?
எத்தனையோ கோரிக்கைகளை முன்வைத்தோமே, அதில் ஒன்றைக்கூடவா உறுதிசெய்து அறிக்கையில் சேர்க்க மனம் வரவில்லை?
நெடுஞ்சாலைகள் – இயில்வே திட்டங்கள் – கோவை, மதுரை மெட்ரோ ரயில் எதையுமே கொடுக்காதது ஏன்? எது தடுக்கிறது?
கொள்கையையும் மொழியையும் திணிப்பதில்தான் ஆர்வம்

பொருளாதார ஆய்வறிக்கை, உயர்கல்வி நிறுவனங்களின் தரவரிசை அறிக்கை, நிதி ஆயோக் அறிக்கை என ஒன்றிய அரசின் அனைத்து அறிக்கைகளிலும் முதன்மையான இடத்தைப் பிடிக்கிறது தமிழ்நாடு. பக்கத்துக்குப் பக்கம் தமிழ்நாட்டின் செயல்பாடுகளுக்குப் பாராட்டுப் பத்திரம் வாசிக்கப்படுகிறது. ஆனால், நிதிநிலை அறிக்கையில் மட்டும் இந்த ஆண்டும் தமிழ்நாடு முழுமையாகப் புறக்கணிக்கப்படுவது ஏன்?
தமிழ்நாடு ஏற்காத கொள்கைகளையும் மொழியையும் திணிப்பதில் காட்டும் ஆர்வத்தில் சிறு துளியையாவது நிதி ஒதுக்கீட்டில் காட்ட வேண்டாமா?
ஒன்றிய அரசானது தன்னுடைய திட்டங்களில் தன்னுடைய பங்குத் தொகையைக் குறைத்து கொண்டே வருவதால், மாநில அரசின் நிதிச்சுமை அதிகரித்துக் கொண்டே வருகிறது. பல்வேறு திட்டங்களில் மிகவும் குறைவாக மானியத் தொகையை வழங்கும் ஒன்றிய அரசு, அதிலும் பல்வேறு கட்டுப்பாடுகளைத் தமிழ்நாட்டிற்கு மட்டும் விதித்துள்ளது.
பாஜகவின் பம்மாத்து நாடகம்! Even tamilnadu name not in budget
விளம்பர மோகம் கொண்ட ஒன்றிய அரசு, திட்ட விளம்பரங்களில் ஒன்றிய அரசின் முத்திரை இடம் பெறாவிட்டால், திட்டம் சரியாகவும் செம்மையாகவும் செயல்படுத்தப்பட்டிருப்பினும், நமக்குச் சேரவேண்டிய திட்ட நிதியை விடுவிப்பதில்லை. விளம்பரம் ஒன்றையே பாராட்டும் ஒன்றிய அரசு, மக்கள் நலனில் எந்தவொரு அக்கறையையும் காட்ட மறுக்கிறது.
வெற்றுச் சொல் அலங்காரங்களும், வஞ்சனையான மேல் பூச்சுகளும் கொண்ட அறிக்கையின் மூலமாக இந்திய நாட்டு மக்களை வழக்கம் போல் ஏமாற்றும் பா.ஜ.க.,வின் பம்மாத்து நாடகம் தொடர்கிறது.
எந்த மாநிலத்தில் தேர்தல் நடைபெறவுள்ளதோ, எங்கு பா.ஜ.க. கூட்டணி ஆட்சியில் உள்ளதோ அந்த மாநிலத்துக்கு மட்டும்தான் திட்டங்களும் நிதியும் அறிவிக்கப்படும் என்றால் ‘ஒன்றிய’ நிதிநிலை அறிக்கை என இதனை அழைக்க வேண்டிய அவசியம் என்ன?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். Even tamilnadu name not in budget Even tamilnadu name not in budget