சேலம் கலெக்டர் ரோகிணியை டிரான்ஸ்ஃபர் பண்ணுணதுக்கு சேலம் மாவட்ட போட்டோகிராபர்கள் எல்லாம் ஒண்ணா சேர்ந்து போராட்டம், ஆர்ப்பாட்டம்னு இறங்கப் போறாங்களாம். விவசாயிகளோட வாழ்வாதார பிரச்சினைக்கு குரல் கொடுக்குறீங்களே எங்க வாழ்வாதார பிரச்சினையை கண்டுக்க மாட்டிக்கீங்களேன்னு எனக்கு போன் போட்டு ரெண்டு பேர் அழுகுறாங்க. கஷ்டமாதான் இருக்கு. இருந்தாலும் சென்னை கலைஞர்களின் வாழ்க்கையிலயும் ஒளி ஏத்திவைக்கனும்லன்னு சமாதானப் படுத்திவச்சுருக்கேன். இசைக்கல்லூரி பதிவாளரா பதிவியேற்குறாங்களாம். அப்ப இனிமேல் கையில ஹேண்ட் பேக் பதிலா ஒரு வீணை, தம்புராவோட தான் பேட்டி கொடுப்பாங்க. அப்டேட்டை பாருங்க. பக்கத்துல எங்கேயோ பஜனை பாடுற சத்தம் கேக்குது என்னனு பார்த்துட்டு வாரேன்
**Raghavendra Aara**
ரொம்ப வரலாற்றுக்குள்ள போகல….
நேற்று முன் தினம்: அண்ணன் டிடிவி
நேற்று: அண்ணன் எடப்பாடி
இன்று: அண்ணன் ஸ்டாலின்…
நாளைய அண்ணன் யாரோ?
**Duraimurugan pandiyan**
திமுகவில் இணைந்தார் தங்கச்தமிழ்செல்வன்
பசிக்கும்ல …

**செந்திலின்_கிறுக்கல்கள் **
சந்தோசம் என்பது யாதெனில் இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்சின் பொழுது மனைவி ஊருக்கு செல்வது தான்!
**கோழியின் கிறுக்கல்!!**
என்னவள் சென்னையை போன்றவள்!!
மழைக்காலத்தில் மூழ்கடிப்பாள்…
கோடை காலத்திலும் திணரடிப்பாள்!!!
**mohanram.ko**
கொலை குற்றம் பண்ண மாதிரி கேட்கறாங்க….
போன் பண்ணா, ஸ்விட்ச் ஆஃப் னு வருது..
**எனக்கொரு டவுட்டு **
பொண்டாட்டி வந்த பிறகு நீங்கெல்லாம் மாறிடீங்க என அம்மா சொல்வது குளோபல் டிசைன்..!

**சுபாஷினி**
போதையில் வண்டி ஓட்டினால் 10000 அபராதம் -செய்தி
போதையில்லாம ஓட்டினால் 10000 ரூபாய் போனஸ்னு சொன்னாலும் ஒரு பய குடிக்கிறத நிறுத்தப் போறதில்ல..!
**ஜால்ரா காக்கா**
சேலம் ஆட்சியர் ரோகிணி அரசு இசைக் கல்லூரி பதிவாளராக நியமனம்
//அப்போ இனிமே வீணை வாசிக்கிற மாதிரி, நாதஸ்வரம் ஊதுற மாதிரி தான் போஸ் கொடுக்கனும் போலயே கோபால்
**Contractor Hasan Kalifa**
சேலம் மாவட்ட ஆட்சியராக இருந்த ரோகிணி தமிழ்நாடு அரசு இசை, கவின்கலை பல்கலைக்கழகத்தின் பதிவாளராக நியமனம்.
//அந்த போட்டோகிராபருக்கு ஒன்னும் பாதிப்பில்லைலே.

**மெத்த வீட்டான்**
சென்னையில இருக்குற ஹோட்டல்களையும் அதில் சாப்பிடுற கூட்டத்தையும் பார்த்தால் வீட்டுல யாருமே சமைக்க மாட்டாங்க போல !
**கோழியின் கிறுக்கல்!!**
சலூனில் கிரிக்கெட் பார்த்துட்டே சவரம் செய்வது எவ்வளவு ஆபத்தான ஒன்று!!
ஒவ்வொரு பந்துக்கும் கத்தி கழுத்திலே இறங்கிடுமோன்னு பயமா இருக்கு!!
**செந்திலின்_கிறுக்கல்கள் **
ஜம்மு காஷ்மீரில் நடைபெற்றுவரும் தீவிரவாத செயல்களுக்கு ஜவகர்லால் நேருதான் காரணம்- அமித்ஷா# நல்ல வேலை எங்க கிட்ட விஜயகாந்த் இருக்காரு அவர வச்சி காஷ்மீர மீட்டுடுவோம்னு சொல்லாம போனிங்க?!
**ச ப் பா ணி**
கடன் மூழ்க வைக்கிறது
EMI நீந்த வைக்கிறது

**செந்திலின்_கிறுக்கல்கள் **
நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து பயணிக்க வேண்டிய நேரம் இது-மோடி # பிளைட் டைம் சொல்லுங்க ஜி வந்துடுறோம்!?
**செங்காந்தள்**
வெளியில் செல்லும்போது மொபைல் பேட்டரி 100% இருந்தால் அதுவும் நல்ல சகுனமாக எடுத்துக்கொள்ளப்படும்…!!!
**கோழியின் கிறுக்கல்!!**
குழந்தை தன் உலகை சுற்றி வர ஒரு சைக்கிள் போதுமானதாக இருக்கிறது!!!
**மெத்த வீட்டான்**
தினகரன் தனது ஆதரவாளர்களை தக்க வைத்துக்கொள்ள ஒரே வழி அவரும் திமுகவில் இணைவதுதான் !

**அபிவீரன் **
ஜம்மு காஷ்மீரில் நடைபெற்றுவரும் தீவிரவாத செயல்களுக்கு ஜவகர்லால் நேருதான் காரணம்! “.- அமித்ஷா,
அவரு தொப்பி போட்டிருந்தானால அவர “பாய்”னு நெனச்சிட்டாரோ
**ஜோக்கர்…**
கருந்துகள் கூட கண்டுபிடிக்கப்பட்டது,
காதலியின் கோவத்திற்கான காரணங்கள் தான் கண்டுபிடிக்க முடியவில்லை!
“ஏன்மா உம்முன்னு இருக்கேன்னு கேட்டா கூட, இது கூட தெரியலயான்னு சொல்லி சண்டை போட அவர்களால் மட்டுமே முடியும்”
**பர்வீன் யூனுஸ்**
அரசியல் என்பதே மெகா சீரியல் மாதிரி தான் -ஜெயக்குமார் #
ஆமா..அரசியல்வாதிங்க நீங்க நடிக்கறீங்க.. மக்கள் நாங்க அழுவறோம்..!
-லாக் ஆஃப்