உலகமே நியூ நார்மலில் இருப்பது போல, இப்போது நியூ சிம்பு தமிழ் சினிமாவுக்குக் கிடைத்திருக்கிறார். இத்தனைக் காலமாக நடிக்காமல் விட்டதற்கெல்லாம் சேர்த்து வைத்து அடுத்தடுத்து படங்கள் என செம பிஸியாக இருக்கிறார் சிம்பு.
உடல் எடையைக் குறைத்து செம ஃபிட் சிம்புவாகியிருப்பவர் மாநாடு படத்தில் கவனம் செலுத்திவருகிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
சமீபத்தில் ஒரு தகவல் சொல்லியிருந்தோம். மாநாடு படம் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தார்கள். இந்தப் படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷனும் எஸ்.ஜே.சூர்யாவும் மற்ற படங்களில் செம பிஸி. தற்பொழுது மாநாடு படத்துக்கு காமினேஷன் காட்சிகள் எடுக்க வேண்டியிருக்காம். ஆனால், அமிதாப் உடனான பாலிவுட் படத்துக்குச் சென்றுவிட்டார் கல்யாணி. அதுமாதிரி, சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் டான் படத்தின் படப்பிடிப்புக்காக கோவை சென்றுவிட்டார் எஸ்.ஜே.சூர்யா. இதனால், காம்பினேஷன் காட்சிகள் எடுக்கமுடியாமல் படப்பிடிப்பு நிறுத்தி வைத்திருந்தார்கள். மீண்டும் இருவரும் மாநாட்டில் இணைவதால் விரைவில் படப்பிடிப்பு துவங்குகிறது.
இந்நிலையில் படத்தின் ரிலீஸ் குறித்த புதிய அப்டேட் கிடைத்திருக்கிறது. சிம்புவின் மாநாடு படத்தை ரம்ஜான் ஸ்பெஷலாக வெளியிட இருப்பதாகத் தகவல். ஏப்ரல் & மே மாதங்களைக் குறிவைத்துப் பெரிய ஹீரோஸ் படங்கள் தயாராகிவருகிறது. அந்த லிஸ்டில் சிம்புவும் இணைகிறார். சிம்புவின் மாநாடு படம் மே 14ஆம் தேதி ரம்ஜான் ஸ்பெஷலாக வெளியாகத் திட்டமிட்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.
ஏற்கெனவே, சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்த ஈஸ்வரன் படம் பொங்கல் தின ஸ்பெஷலாக ஜனவரி 14ஆம் தேதி வெளியானது. இப்போது, அப்துல் காலீக்காக மாநாடு படத்தில் நடித்திருக்கும் மாநாடு ரமலானைக் குறிவைத்து வெளியாகிறதாம்.
**- தீரன் **
