உடல் எடையைக் குறைக்கப் போறீங்களா? – இந்த டெஸ்ட்லாம் ரொம்ப முக்கியம்!

By Santhosh Raj Saravanan

|

Published on 1 Jun 2026, 1:37 PM

Essential health check-up before lose weight

உடல் எடையை குறைக்க (Lose Weight) முயற்சி எடுக்கும் முன்பு சில அத்தியாவசிய உடல்நல பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

தற்போதைய வாழ்க்கை முறை மாற்றம் காரணமாக உடல் எடை கட்டுப்பாட்டில் இல்லாமல் அதிகரித்து வருகிறது.  மோசமான உணவுப் பழக்கம், தொடர்ந்து அமர்ந்துகொண்டே வேலை செய்வது, உடற்பயிற்சியே இல்லாதது, தூக்கமின்மை ஆகியவை உடல் எடை அதிகரிக்க முக்கிய காரணங்களாக உள்ளன. ஒரு கட்டத்தில் நமது உடல் எடை அதிகரிப்பைப் பார்த்து நமக்கே எரிச்சல் ஏற்பட்டுவிடும். உடனே உடல் எடையை குறைக்க வேண்டும் என உணவு முறை மாற்றம்,  நடைபயிற்சி (Walking) செல்வது, ஜிம்மிற்கு செல்வது என்று தொடங்குவோம்.

ADVERTISEMENT

ஆனால், எவ்வளவு முயற்சி செய்தாலும் சிலரால் உடல் எடையைச் சிறிது கூட குறைக்க முடிவதில்லை. இதற்குக் உடலில் ஏற்படும் வளர்சிதை மாற்றக் கோளாறுகள் அல்லது ஹார்மோன் சமநிலையின்மை கூட காரணமாக இருக்கலாம். அதனால்தான், எடை குறைப்புப் பயணத்தைத் (Weight Loss Tips) தொடங்குவதற்கு முன்பு, உடலுக்குள் உண்மையில் என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொள்வது மிகவும் முக்கியம்.  உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் கண்டிப்பாக மேற்கொள்ள வேண்டிய உடல் பரிசோதனைகளின் விவரங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

சர்க்கரை அளவு பரிசோதனை

ADVERTISEMENT

வெறும் வயிற்றில் ரத்தச் சர்க்கரை (Fasting Blood Sugar) மற்றும் வெறும் வயிற்றில் இன்சுலின் எவ்வளவு உள்ளது என்பதை முதலில் பரிசோதனை செய்ய வேண்டும். இது உடலில் இன்சுலின் எதிர்ப்பு உள்ளதா என்பதையும், ப்ரீ டயபடிக் ஏற்படும் அபாயம் உள்ளதா என்பதையும் காட்டுகிறது. இன்சுலின் அளவு அதிகமாக இருந்தால் உடல் எடையைக் குறைப்பது கடினமாக இருக்கும். HbA1c இது கடந்த 3 மாதங்களுக்கான சராசரி ரத்தச் சர்க்கரை கட்டுப்பாட்டைக் காட்டுகிறது.

தைராய்டு பரிசோதனை

ADVERTISEMENT

தைராய்டு சுயவிவரம் (TSH, T3, T4) பரிசோதனை செய்ய வேண்டும். ஹைப்போதைராய்டிசம் மெதுவான வளர்சிதை மாற்றத்தையும் அதிகப்படியான உடல் எடை அதிகரிப்பையும் ஏற்படுத்துகிறது. ஆகவே, தைராய்டு பரிசோதனை செய்துகொள்வதன் மூலம் எடை அதிகரிப்புக்கு அதுதான் காரணமாக என தெரிந்துகொள்ள முடியும். ஒருவேளை தைராய்டு இருந்தால் அதற்கு ஏற்ற வகைகளில் உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாட்டை மாற்றிக்கொள்ளலாம்.

பிசிஓஎஸ் ஹார்மோன் சுயவிவரம்

பெண்களிடம் ஏற்படும் ஹார்மோன் சமநிலையின்மை மற்றும் பிசிஓஎஸ் (pcos hormone test) பிரச்சனைகளைக் கண்டறிய இது அவசியமாகும். அதேபோல மன அழுத்தத்தால் அதிகரிக்கும் சீரம் கார்டிசோல் ஹார்மோனின் (serum cortisol) அளவை அளவிட இது பயன்படுகிறது. இது வயிற்றைச் சுற்றி கொழுப்பு சேர்வதற்கு வழிவகுக்கும். இவற்றை கண்டுபிடித்தால் அதற்கேற்ற வகையில் உடல் எடை குறைப்பை வைத்துக்கொள்ளலாம்.

முழு ரத்த பரிசோதனை, வைட்டமின் சோதனை

முழுமையான இரத்தப் பரிசோதனை (CBC) மற்றும் ரத்த அழுத்த அளவீடு பரிசோதனைகளை மேற்கொள்ளலாம்.  ரத்தசோகை, தொற்றுகள் மற்றும் ரத்த அழுத்த அளவுகள் இதன்மூலம் கண்டறியப்படுகின்றன. அதேபோல வைட்டமின் டி (Vitamin D) மற்றும் வைட்டமின் பி12 பரிசோதனை செய்துகொள்வதும் முக்கியம். இந்த வைட்டமின்களின் குறைபாடு, அதீத சோர்வு மற்றும் வளர்சிதை மாற்றக் குறைபாட்டை ஏற்படுத்தும்.

கல்லீரல், கொழுப்பு பரிசோதனை

நல்ல கொழுப்பு, கெட்ட கொழுப்பின் அளவை கண்டறிய லிப்பிட் புரொஃபைல் சோதனை (lipid profile test) மிகவும் உதவி புரிகிறது. இதன்மூலம் கொழுப்பு அளவுகளையும் இதய ஆரோக்கிய நிலையையும் மதிப்பிடலாம். கொழுப்பு அதிகமாக இருந்தால் உடல் எடை குறைப்பு மற்றும் உடற்பயிற்சி என்பது மிகவும் அவசியமாகும். கல்லீரல் (LFT) மற்றும் சிறுநீரக (KFT) பரிசோதனைகள் கொழுப்பு கல்லீரல் பிரச்சனைகளையும் சிறுநீரக செயல்பாட்டையும் கண்டறிய உதவுகின்றன.

அல்ட்ராசவுண்ட், ஈ.சி.ஜி.

வயிற்றுக்கான அல்ட்ராசவுண்ட் (Ultrasound) மற்றும் ஈசிஜி எடுப்பது மிகவும் அவசியம். உடற்பயிற்சியைத் தொடங்குவதற்கு முன், வயிற்றிலுள்ள உள் உறுப்புகளின் நிலையையும் இதயத்தின் ஆரோக்கியத்தையும் சரிபார்க்க இவை பயன்படுகின்றன. அதேபோல  தூக்கமின்மை அல்லது தூக்கத்தில் மூச்சுத்திணறல் போன்ற பிரச்சனைகள் உங்கள் உடல் எடையைக் குறைக்க விடாமல் தடுக்கின்றனவா என்பது தெரியவரும்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Santhosh Raj Saravanan

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel