ADVERTISEMENT

ஈரோடு கிழக்கு : வாக்குப்பதிவு நிறைவு!

Published On:

| By Kavi

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் இன்று (பிப்ரவரி 5) நடைபெற்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவுபெற்றது. erode east election completed

காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவைத் தொடர்ந்து, ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

இந்த தேர்தலில் திமுக வேட்பாளர் விசி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி ஆகியோர் களம் கண்டனர்.

இன்று 53 மையத்தில் 237 வாக்குச்சாவடியில் காலை 7 மணி முதல் மாலை 6 வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.

ADVERTISEMENT

இதில், காலை 9 மணி நிலவரப்படி 10.95% வாக்குகள் பதிவாகியிருந்தன.

11 மணி நிலவரப்படி 26.03% வாக்குகளும், பிற்பகல் 1 மணி நிலவரப்படி 42.41% வாக்குகளும், பிற்பகல் 3 மணி நிலவரப்படி, 53.63 சதவீதம் வாக்குகளும் பதிவாகியிருந்தன.

ADVERTISEMENT

மாலை 5 மணிக்கு 64.02% வாக்குகள் பதிவாகிய நிலையில், 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவு பெற்றது.

இதையடுத்து வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டது.

2023 பிப்ரவரி 27ஆம் தேதி நடந்த இடைத்தேர்தலில் 74.79% சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தன. இது 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் ஈரோடு கிழக்கில் பதிவான வாக்குகளை காட்டிலும் 8 சதவிகிதம் அதிகமாகும்.

ஆனால் இந்த முறை 64.02% வாக்குகளே பதிவாகியுள்ளன. ஆனால் இன்னும் தேர்தல் ஆணையம் முழுமையான விவரங்களை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. erode east election completed

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share