ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று (பிப்ரவரி 7 ) மாலை 3 மணியுடன் நிறைவடைந்துள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 31-ஆம் தேதி தொடங்கியது. தினமும் பகல் 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் நடந்தது.
கடந்த 4-ந் தேதி வரை 5 நாட்களில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உட்பட 46 பேர் வேட்பு மனு தாக்கல் செய்து இருந்தார்கள்.
நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் மனு தாக்கல் கிடையாது. இந்நிலையில், 6-வது நாளான நேற்று , அண்ணா எம்.ஜி.ஆர். திராவிட மக்கள் கட்சி சார்பில் ஈரோடு புதூரை சேர்ந்த சுந்தராஜன்,
கொங்கு தேச மறுமலர்ச்சி மக்கள் கட்சி சார்பில் கே.பி.எம்.ராஜா, அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சியின் சார்பில் ஈரோடு காசிபாளையத்தை சேர்ந்த பிரேம்நாத்,
இந்திய குடியரசு கட்சி சார்பில் திருவள்ளூர் மாவட்டம் ஈக்காடு பகுதியை சேர்ந்த மணி ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
மேலும் அனைத்து இந்திய ஜனநாயக பாதுகாப்பு கழகம் சார்பில் நெல்லை பாளையங்கோட்டையை சேர்ந்த பேராயர் காட்பிரே வாஷிங்டன் நோபுள் ஆகியோர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தார்கள்.

இதேபோல் சுயேச்சையாக 7 பேர் வேட்பு மனுக்களை வழங்கினார்கள். எனவே நேற்று மட்டும் ஒரே நாளில் 13 பேர் வேட்பு மனுக்களை வழங்கினார்கள்.
இந்நிலையில், வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று (பிப்ரவரி 7 ) அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு வேட்பு மனு தாக்கல் செய்தார்.
மொத்தம் 70 க்கும் மேற்ப்பட்ட வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்
வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கு வருகிற 10-ஆம் தேதி கடைசி நாளாகும். எனவே அன்றைய தினம் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து திடீர் ஓய்வை அறிவித்த அதிரடி ஆட்டக்காரர்
