ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று (பிப்ரவரி 5) காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. erode east bypoll voting
திமுக வேட்பாளர் சந்திரகுமார், நாம் தமிழர் வேட்பாளர் சீதாலட்சுமி உள்ளிட்ட 46 பேர் களத்தில் உள்ளனர். இன்று காலை சூரம்பட்டில் உள்ள வாக்குச்சாவடியில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் தனது குடும்பத்துடன் சென்று வாக்களித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சந்திரகுமார், “இந்த தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றி பெறும். நான்கு ஆண்டுகால திமுக அரசின் சாதனைகளே இந்த வெற்றிக்கு காரணமாக இருக்கும். ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள மக்கள் அனைவரும் தவறாது வாக்கு செலுத்தி தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும்” என்று தெரிவித்தார்.
காலை 9 மணி நிலவரப்படி ஈரோடு கிழக்கு தொகுதியில், 10.85 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியிருந்தது. இந்தநிலையில், காலை 11 மணி நிலவரப்படி 25.98 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. erode east bypoll voting