அதிமுக நிர்வாகிகள் விரலில் மை இருக்கானு பாருங்க! -எடப்பாடி உத்தரவு?

Published On:

| By Aara

Erode East by-polls Edappadi Order

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில்  வாக்குப் பதிவு சதவிகிதம் முன்பை விட 7 சதவிகிதம் குறைந்திருக்கிறது. 2023 இடைத் தேர்தலில் 75 சதவிகிதம் ஓட்டுகள் பதிவான நிலையில், இப்போது அதிமுக தேர்தலை புறக்கணித்தபோதும் 68% வாக்குப் பதிவாகியுள்ளது. Erode East by-polls Edappadi Order

ஈரோடு திமுக மாசெவும் அமைச்சருமான முத்துசாமி ஏற்கனவே அதிமுகவில் இருந்தவர். அதனால் பழைய பாசத்தில் ஈரோடு நகரத்தில் இருக்கும் நிர்வாகிகளோடு அவர் ஏற்கனவே பேசிவிட்டார்.

அந்த வகையில் தேர்தல் தினமான நேற்று அதிமுக நிர்வாகிகளை வாக்களிக்க வருமாறு திமுக நிர்வாகிகள் அழைத்திருக்கிறார்கள். Erode East by-polls Edappadi Order

அப்போது அதிமுக நிர்வாகிகள், ‘அண்ணே… நான் வரலை வீட்லயும் (மனைவி), பையனும் வந்து உங்களுக்கு ஓட்டுப் போட்டுடுவாங்க. தேர்தல் முடிஞ்சதும் அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தை அங்கங்க போட்டு விரல்ல மை இருக்கானு பாருங்கனு எடப்பாடி சொல்லியிருக்காராம். அதனாலதான் நாங்க வரலை. எங்க வீட்லேர்ந்து வந்து ஓட்டுப் போட்டுருவாங்க’ என்று சொல்லியிருக்கிறார்கள்.

அதன்படியே அதிமுகவின் பகுதி, மாவட்ட நிர்வாகிகள் பலர் வாக்களிக்கச் செல்லாமல், திமுகவிடம் இருந்து வாங்கிய பணத்துக்கு… தங்கள் குடும்பத்தினரை வாக்களிக்க அனுப்பியிருக்கிறார்கள்.

அதிமுக வட்டாரத்தில் விசாரித்தபோது, “இங்கே ஒரே சமூகத்தில் திமுக, அதிமுக என இரு கட்சி நிர்வாகிகளும் இருக்கிறார்கள். அதிமுக போட்டியிடவில்லை என்றானதும் சமூக அடிப்படையில் சில விஷயங்கள் பேசி முடிக்கப்பட்டுவிட்டன.

அந்த வகையில்தான் அதிமுக நிர்வாகிகள் தாங்கள் நேரடியாக சென்று வாக்களிக்காமல், தங்கள் குடும்ப உறுப்பினர்களை வாக்களிக்க அனுப்பியிருக்கிறார்கள்” என்கிறார்கள். Erode East by-polls Edappadi Order

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share