இடைத்தேர்தல்: இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு!

Published On:

| By Selvam

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று (பிப்ரவரி 10) வெளியாகிறது.

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4-ஆம் தேதி மாரடைப்பால் மரணமடைந்தார். இதனை தொடர்ந்து அந்த தொகுதிக்கு பிப்ரவரி 27-ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT
erode east assembly by election final candidate list announced

வேட்பு மனுத்தாக்கல் ஜனவரி 31-ஆம் தேதி துவங்கி பிப்ரவரி 7-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. 96 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். இதில் 83 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டு 13 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டது.

காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், அதிமுக சார்பில் தென்னரசு, தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா ஆகியோரது வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இன்று வேட்புமனுக்களை வாபஸ் பெற கடைசி நாளாகும். இன்று மாலை 3 மணி வரை வேட்புமனுக்களை வாபஸ் பெறலாம். அதனை தொடர்ந்து வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியிடப்படுகிறது.

திமுக அமைச்சர்கள் மற்றும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

ADVERTISEMENT
erode east assembly by election final candidate list announced

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குக்கர் சின்னம் கிடைக்காததால் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று அறிவித்தார்.

இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக, அதிமுக, தேமுதிக, நாதக என நான்கு முனை போட்டி நிலவுகிறது.

தமிழக முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து பிப்ரவரி 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் முடிவுகள் மார்ச் 2-ஆம் தேதி வெளியாக உள்ளது.

செல்வம்

துருக்கி நிலநடுக்கம்: 20 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கையும் அச்சுறுத்தும் இயற்கையும்!

டிஜிட்டல் திண்ணை: 15 நாட்களில் 100 கோடி… அண்ணாமலை டார்கெட்!

Photo of author
Selvam
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share