திருச்சியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக நலன்கள் சார்ந்த கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தார்.
திருச்சி விமான நிலையத்தில் பிரதமர் மோடியை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அக்கட்சியின் மூத்த தலைவர்களான கேபி முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், எஸ்பி வேலுமணி, காமராஜ் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
அப்போது பிரதமர் நரேந்திர மோடியிடம் அதிமுகவின் கோரிக்கை மனு ஒன்றையும் எடப்பாடி பழனிசாமி கொடுத்தார்.
அதில், விவசாய கடன் வழங்க ஸ்பில் ஸ்கோர் கேட்பதை கைவிட வேண்டும்; கோதாவரி- காவிரி நதிகள் இணைப்பு திட்டத்துக்கு நிதி ஒதுக்க வேண்டும்; சென்னை- கோவை- ஓசூர்- சேலம்- திருச்சியை இணைக்கும் ராணுவ தளவாட உற்பத்திக்கான பிரத்யேக ராணுவ வழித்தடம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.
பிரதமர் மோடியுடனான சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, சிரித்த முகத்துடன் பிரதமர் மோடியை வரவேற்றோம்; அவரும் எங்களுக்க நல்ல சிறப்பான மரியாதை கொடுத்தார் என்றார்.
