விஜய்யை தாக்கி பேச ஆரம்பித்த எடப்பாடி பழனிசாமி

Published On:

| By Pandeeswari Gurusamy

புதிதாக கட்சி தொடங்கியவர்கள் எல்லாம் அதிமுகவின் பலம் தெரியாமல் பேசுகிறார்கள் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அரசியல் கட்சிகளுக்கு இடையே கூட்டணி பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் புதிதாக கட்சி தொடங்கிய தமிழக வெற்றிக் கழகமும் அடுத்த ஆண்டு தேர்தலை மையமாக வைத்து பணிகளை தொடங்கி உள்ளனர்.

ADVERTISEMENT

முன்னதாக தவெக – அதிமுக இடையே கூட்டணி உருவாக வாய்ப்பு உள்ளது என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த நிலையல் தவெகவின் கட்சி நிகழ்ச்சிகள் ஒத்தி வைக்கப்பட்டிருந்தன. அந்த சூழலில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளைம் சட்ட மன்ற தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி கூட்டத்தில் தவெக கொடி இருந்ததை சுட்டிக்காட்டி இதோ பாருங்கள் கொடி பறக்குது.. பிள்ளையார் சுழி போட்டாச்சு எழுச்சி ஆரவாரம். ஸ்டாலின் அவர்களே இந்த ஆரவாரம் உங்கள் செவிகளை துளைக்கும் என்று பேசினார்.

ஆனால் தவெக அதிமுக இடையே கூட்டணி ஏற்படுவதில் சிக்கல் நிலவிய நிலையில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் தவெகவில் இணைந்தார்.

ADVERTISEMENT

தவெகவை பொறுத்தவரை விஜய் தலைமையை ஏற்பவர்களுடன்தான் கூட்டணி என அக்கட்சியின் தலைமை நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும் நடிகரும் தவெக தலைவருமான விஜய் தொடர்ச்சியாக தவெகவிற்கும் ஆளும் திமுகவினருக்கும் இடையே தான் போட்டி என்று பேசி வருகிறார்.

இந்நிலையில் நேற்று திருத்தணியில் மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் பிரச்சாரத்தின்போது எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “புதிய கட்சி தொடங்கியவர்கள் எல்லாம் அதிமுக பலம் தெரியாமல் பேசுகிறார்கள் “என மறைமுகமாக விஜயை தாக்கி பேசினார்.

ADVERTISEMENT

முன்னதாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ , “அதிமுக களத்தில் இல்லை என்று கூறும் விஜய்க்கு நாவடக்கம் தேவை.. கூட்டம் எல்லோருக்கும் வரும் நயன்தாரா, வடிவேலுவுக்கு கூட கூட்டம் வரும்” என்று காட்டமாக பேசி இருந்தார்.

கரூர் சம்பவத்தை தொடர்ந்து தொடர்ச்சியாக அதிமுகவின் விஜய்க்கு ஆதரவாக கருத்துகளை தெரிவித்து வந்தனர். எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்திலேயே விஜய்க்கு ஆதவாக பேசினார். ஆனால் தற்போது கூட்டணி சாத்தியமில்லை என்ற சூழல் உருவாகி உள்ள நிலையில் இனி விஜய் குறித்த காட்டமான விமர்சனங்களை அதிமுக தரப்பு முன் வைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share