டெல்லி சென்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துள்ளார். EPS met Amit Shah
அதிமுக பாஜக கூட்டணியில் இருந்து விலகியிருக்கும் நிலையில், மீண்டும் கூட்டணி வைக்குமா என்ற எதிர்பார்ப்பு தமிழக அரசியலில் ஏற்பட்டிருக்கிறது.
இந்தநிலையில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் இன்று (மார்ச் 25) டெல்லி புறப்பட்டு சென்றார் எடப்பாடி பழனிசாமி. அவரை சி.வி.சண்முகம், தம்பிதுரை ஆகியோர் வரவேற்றனர்.
காலை எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்ல பிற்பகலில் வேலுமணி, முனுசாமி ஆகிய முன்னாள் அமைச்சர்களும் டெல்லி சென்றனர்.
முதலில் டெல்லியில் புதிதாக திறக்கப்பட்ட கட்சி அலுவலகத்தை நேரில் சென்று பார்வையிட்டார் எடப்பாடி பழனிசாமி.
அதைத்தொடர்ந்து அமித்ஷாவை சந்திப்பதற்காக காத்திருந்தார்.
இதற்கிடையே நாடாளுமன்ற அலுவலகத்தில் இருந்து இரவு 7 மணிக்கு டெல்லியில் உள்ள தனது வீட்டுக்கு வந்தார் அமித் ஷா.
அதைத்தொடர்ந்து சுமார் 8 மணியளவில் அவரது வீட்டுக்கு சென்ற எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவை சந்தித்து பேசி வருகிறார். அவருடன் கே.பி.முனுசாமி, வேலுமணி, சி.வி.சண்முகம், தம்பிதுரை ஆகியோரும் உடன் உள்ளனர். EPS met Amit Shah