அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (மார்ச் 25) இரவு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை டெல்லியில் அவரது இல்லத்தில் சந்தித்தார்.
இரவு 8.15 முதல் பத்தரை மணி வரை இந்த சந்திப்பு நடைபெற்றது. இதனால் அதிமுக-பாஜக கூட்டணி அமைக்கப்படும் என்று பேச்சுகள் எழுந்துள்ளன. Amitsha important statement
முன்னதாக நாடாளுமன்றத்தில் இன்று அதிமுக ராஜ்யசபா உறுப்பினர் தம்பி துரையின் பெயரைக் குறிப்பிட்டு பேசிய அமித் ஷா, “தமிழ்நாட்டில் 2026ல் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்த பின்பு, மது வெள்ளமும், ஊழல் புயலும் முடிவுக்கு வந்துவிடும்” என்று தெரிவித்திருந்தார்.
எடப்பாடியுடனான சந்திப்பு முடிந்த பிறகு தான் நாடாளுமன்றத்தில் பேசிய பேச்சில் இருந்து அந்த காட்சியை மட்டும் கத்தரித்து, தமிழ் குறிப்போடு அமித் ஷா தனது சமூக தளப் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். Amitsha important statement
இதன் மூலம் அமித் ஷா அதிமுக மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் வருவதை உறுதிப்படுத்தியிருக்கிறார் என்கிறார்கள் டெல்லி வட்டாரங்களில்.