அதிமுக எம்.எல்.ஏ வீட்டில் சோதனை… Knee Jerk Reaction என விமர்சித்த எடப்பாடி

Published On:

| By christopher

eps attack tn govt for admk raid

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்ற மக்களின் ஒருமித்த எண்ணத்தையும் உணர்ந்ததன் Knee Jerk Reaction தான் அம்மன் அர்ஜூனன் மீது ஏவப்பட்டுள்ள லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை என எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். eps attack tn govt for admk raid

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் அதிமுக எம்.எல்.ஏ அம்மன் அர்ஜூனன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் இன்று (பிப்ரவரி 25) காலை 6.30 மணி முதல் 4 மணி நேரமாக அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

திசைதிருப்ப ஏவும் ஆயுதங்களில் ஒன்று! eps attack tn govt for admk raid

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ”கோவை மாநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், கோவை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அன்புச் சகோதரர் அம்மன் அர்ஜூனன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையை ஏவியுள்ள முதல்வர் ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

இன்றைக்கு தமிழ்நாட்டில் நடக்கும் திமுக-வின் ஸ்டாலின் மாடல் ஆட்சியில் ஊழல் நடக்காத துறையே இல்லை. நாடறிந்த “ஊழல் திலகங்களான” இவர்கள், நாட்டில் நடக்கும் பிரச்சனைகளையும், அதனை சரிசெய்ய வக்கில்லாத தங்கள் நிர்வாகத் திறமையின்மையையும் மறைக்க, திசைதிருப்ப ஏவும் ஆயுதங்களில் ஒன்றாக மாறிவிட்டது “லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை”.

அதிலும், கடந்த சில வாரங்களாக ஊர் ஊராக செல்லும் முதல்வர் ஸ்டாலின், தான் நடத்தும் காட்டாட்சிக்கு மக்களிடையே இருக்கும் பெரும் வெறுப்பையும், அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்ற மக்களின் ஒருமித்த எண்ணத்தையும் உணர்ந்ததன் Knee Jerk Reaction தான் நம் கழக சட்டமன்ற உறுப்பினர் மீது ஏவப்பட்டுள்ள இந்த சோதனை.

இரண்டாவது முறையாக சட்டமன்ற உறுப்பினராக உள்ள அம்மன் அர்ஜூனன் திறம்பட செய்து வரும் கட்சிப்பணியை தடுக்கும் விதமாக, லஞ்ச ஒழிப்பு துறை சோதனையை செய்வது வெட்கக்கேடானது,

தீயசக்தி திமுக தெரிந்து கொள்ளட்டும், இன்னும் எங்களை எதிர்த்து எதுவரினும், எவர்வரினும் துஞ்சாது எதிர்கொள்வோம்! 2026-ல் வெல்வோம்! நல்லாட்சி அமைப்போம்!” என எடப்பாடி தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share