hவாவ்.. யுவன் வெளியிட்ட இளையராஜா வீடியோ !

Published On:

| By Balaji

இசைஞானி இளையராஜாவின் 78ஆவது பிறந்தநாள் இன்று. திரைத்துறையைச் சேர்ந்த ஏகப்பட்டப் பிரபலங்கள் இளையராஜாவுக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில், யுவன் மகள் ஷியாவுக்கு, இளையராஜா ஹேப்பி பர்த்டே பாடலை கீபோர்ட்டில் வாசிக்க கற்றுக் கொடுக்கும் அழகான வீடியோவை இணையத்தில் பகிர்ந்திருக்கிறார் யுவன் ஷங்கர் ராஜா. அந்த வீடியோவோடு ஹேப்பி பர்த்டே டே டாடி” என மகிழ்ச்சியைப் பகிர்ந்திருக்கிறார்.

யுவன் சங்கர் ராஜாவும் இளையராஜாவும் ஒன்றாகச் சேர்ந்து முதன்முதலாக ஒரு படத்துக்கு இசையமைத்து வருகிறார்கள். சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி நடிக்க உருவாகிவரும் மாமனிதன் படம் தான் அது. சமீபத்தில் வெளியான அந்த படத்தின் இரண்டு பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

திரையுலகில் ஆயிரம் படங்களுக்கு மேல் 7000 பாடல்கள் வரை இசையமைத்திருக்கிறார் இளையராஜா. தற்பொழுது, வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடித்துவரும் `விடுதலை` படத்துக்கு இசையமைக்கும் பணிகளை மேற்கொண்டுவருகிறார்.

**- ஆதினி**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share