ஏ.ஆர்.ரஹ்மானை பாராட்டும் யுவன்சங்கர்ராஜா

entertainment

ந்தியத் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஏ.ஆர் ரஹ்மான், உலகம் முழுவதும் இசைக் கச்சேரிகளை நடத்தி வருகிறார்.

சக போட்டியாளர்களையும் சர்வதேச அரங்கில் கௌரவப்படுத்த காரணமாக இருந்த ஏ.ஆர்.ரஹ்மான் செயல் பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.

துபாய் எக்ஸ்போ 2020 நிகழ்வில் இளையராஜா, யுவன்ஷங்கர் ராஜா, அனிருத் ஆகியோரது கச்சேரிகள் நடைபெற்றது. அது பற்றிய தகவலை தெரிவித்துள்ளார் யுவன்சங்கர் ராஜா.

துபாய் எக்ஸ்போவில் எங்களது இசை நிகழ்ச்சிகள் நடக்கக் காரணம் ஏ.ஆர் ரஹ்மான். எக்ஸ்போ நிகழ்வின் அமைப்பாளர்கள் ரஹ்மானிடம் இசை நிகழ்ச்சி நடத்தக் கேட்டுள்ளனர். அவர்களிடம் ஏ.ஆர். ரஹ்மான் நான் இசை நிகழ்ச்சியை நடத்தினால், எனது ஊரில் உள்ளவர்களும் வந்து நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்.

நீங்கள் கோல்டுபிளே, ஷகிரா ஆகியோரை அழைத்து வருவீர்கள். அவர்களைப் போலவே எனது ஊரிலும் புகழ் பெற்ற இசைக்கலைஞர்கள் உள்ளார்கள் என அப்பாவின் பெயரையும், எனது பெயர், அனிருத் பெயரையும் குறிப்பிட்டுள்ளார். அவர்தான் நாங்கள் அங்கு இசை நிகழ்ச்சி நடத்தக் காரணம் என்று யுவன் அந்த பேட்டியில் கூறியவர்
இது போன்று யாரும் செய்ய மாட்டார்கள், ஆனால், ரஹ்மான் செய்தார்.

அங்கு அவரை சந்திக்கவும், பேசவும் வாய்ப்பு கிடைத்தது என ரஹ்மானைப் பாராட்டியுள்ளார் யுவன்சங்கர்ராஜா.
துபாய் எக்ஸ்போ 2020 நிகழ்வில் அனிருத் பிப்ரவரி மாதத்திலும், இளையராஜா, யுவன்ஷங்கர் ராஜா மார்ச் மாதத்திலும் இசை நிகழ்ச்சியை நடத்தினார்கள்.
அப்போது ஏ.ஆர்.ரஹ்மானை அவரது ஸ்டுடியோவிற்கே சென்று இளையராஜா சந்தித்த புகைப்படங்கள் வெளியானது குறிப்பிட வேண்டிய ஒன்று.

**-இராமானுஜம்**

.

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *