எனக்கு நானே மேனேஜர்: யோகிபாபு

Published On:

| By Balaji

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியனாக இருந்து வரும் யோகி பாபு சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். தான் முன்னணி காமெடியனான பிறகு தயாரிப்பு நிர்வாகி சசி என்பவரை கால்ஷீட்டை கவனித்துக்கொள்ளும் மேனேஜராக நியமித்திருந்தார் யோகிபாபு. ஆனால் தற்போது யோகிபாபுவின் மேனேஜர் சசி அந்தப் பணியிலிருந்து விலகிக் கொண்டு உள்ளார்.

இதையடுத்து யோகி பாபு வெளியிட்டுள்ள செய்தியில், “இனிமேல் எனக்கு மேனேஜர் என்று தனிப்பட்ட முறையில் யாரும் கிடையாது. என்னுடைய கால்சீட்டுகளை நானே கவனித்துக் கொள்ளப் போகிறேன். அதனால் படம் சம்பந்தமாக அனைவரும் என்னை நேரடியாகவே அணுகலாம்” என்று தெரிவித்துள்ளார்.

ஏன் இந்த முடிவு என்று யோகிபாபு வட்டாரத்தில் விசாரித்தபோது நடிகர்களுக்கு கால்ஷீட் விவகாரங்களை நிர்வகிக்கும் மேனேஜர்களுக்கு நடிகர்கள் வாங்கும் சம்பளத்தில் 10% முதல் 15% வரை

கமிஷன் கொடுக்க வேண்டும். தொடக்கக் காலத்தில் ஆயிரக்கணக்கில் சம்பளம் வாங்கிய யோகிபாபு தற்போது லட்சக்கணக்கில் வாங்குகிறார். அதனால் அதிகப்படியான கமிஷன் கொடுக்க வேண்டியுள்ளது. இதனை தவிர்க்கத்தான் இப்படி ஒரு முடிவை யோகிபாபு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

**அம்பலவாணன்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share