நிரூப்- அபிராமி காதல் குறித்து மனம் திறந்த யாஷிகா

Published On:

| By admin

நிரூப்- அபிராமி இருவரது காதல் குறித்து நடிகை யாஷிகா தற்போது பேசியுள்ளார்.

பிக்பாஸ் ஓடிடியின் தமிழ் வடிவமாக பிக்பாஸ் அல்டிமேட் தற்போது டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. கடந்த ஐந்து சீசன்களில் இருந்தும் பிக்பாஸ் விளையாட்டை நன்றாக புரிந்து கொண்டு அதற்கேற்றாற்போல கண்டெண்ட் கொடுக்கும் நபர்களாக தேர்ந்தெடுத்துள்ளது பிக்பாஸ் குழு. அந்த வகையில் அனிதா, வனிதா, நிரூப், சுரேஷ் சக்ரவர்த்தி, அபிராமி, தாடி பாலாஜி, பாலா என ஐந்து சீசன்களில் இருந்தும் மொத்தம் 14 போட்டியாளர்கள் உள்ளனர்.

பிக்பாஸ் விளையாட்டை புரிந்தவர்கள் என்பதால் வந்த முதல் நாளில் இருந்தே சமூக வலைதளங்களில் இந்த நிகழ்ச்சி பேசு பொருளாகி இருக்கிறது. அதிலும் குறிப்பாக செலிபிடிரிட்டி vs பத்திரிக்கையாளர்கள் டாஸ்க்கில் அபிராமி- நிரூப் இருவரும் முன்பு ரிலேஷன்ஷிப்பில் இருந்ததையும் வெளிப்படையாக சொல்லி இருந்தார்கள். இது உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தது.

ஏற்கனவே நிரூப்- யாஷிகா இருவரும் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார்கள். அவரால்தான் நிரூப் பிக்பாஸ் வீட்டிற்குள்ளேயே வந்தார். இதனால் பலரும் நிரூப்- அபிராமி காதல் குறித்து யாஷிகாவிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இவர்கள் இரண்டு பேரும் ஏற்கனவே ரிலேஷன்ஷிப்பில் இருந்ததும், பிக்பாஸ் வீட்டிற்குள் போக போறதும் தனக்கு முன்பே தெரியும் எனவும் அவர்கள் இருவருமே இதனை கையாள தெரிந்த அளவிற்கு முதிர்ச்சியானவர்கள்தான். வாழு, வாழ விடு என்று தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும், நிரூப்புடன் திருமணம் எப்போது என கேட்கப்பட்ட கேள்விக்கு நிரூப்பும் நானும் நல்ல நண்பர்கள். இப்போது திருமணம் குறித்தான எந்த ஐடியாவும் எனக்கு இல்லை எனவும் அதில் யாஷிகா தெரிவித்துள்ளார்.

**ஆதிரா**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share