ரசிகர் கேட்ட கேள்விக்கு கூலாக பதிலளித்த யாஷிகா

Published On:

| By admin

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகையான யாஷிகா ஆனந்த், கவலை வேண்டாம், துருவங்கள் பதினாறு, ஜாம்பி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் மூலம் பட்டித்தொட்டியெங்கும் ஏற்கனவே பிரபலமானார். அதனைத் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதன் மூலம் சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் யாஷிகா .

சில மாதங்களுக்கு முன்பு நண்பர்களுடன் பாண்டிச்சேரி சென்றுவிட்டு திரும்புகிறபோது கிழக்கு கடற்கரை சாலையில் விபத்தில் சிக்கி மீண்டு வந்திருக்கும் யாஷிகா, போட்டோஷூட், ரியாலிட்டி ஷோக்கள் என பிசியாக தற்போதும் வலம் வருகிறார்.


இந்த நிலையில் அவர் சமீபத்தில் சமூகவலைதளத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது ஒருவர் யாஷிகாவிடம் ‘நீங்கள் கன்னித்தன்மை உடையவரா?’ என அவர் கன்னித்தன்மையை பரிசோதிக்கும் கேள்வியை எழுப்பியுள்ளார். இதற்கு பதிலளித்துள்ள யாஷிகா எந்த வித டென்ஷனும் இல்லாமல் கூலாக ‘இல்லை நான் யாஷிகா’ என கூறியுள்ளார். சமூக வலைத்தளங்களில் பிரபலமானவர்களாக இருக்கும் பெண்களை, உடல் ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் தேவையில்லாத கேள்விகளை நாகரீகமற்ற, வக்கிரம் பிடித்தவர்கள் சமூக வலைதளங்கள் மூலம் கேட்டு வருகின்றனர். அவர்களை போன்றவர்களை, யாஷிகா மிகவும் சாதாரணமாக கடந்து சென்றதை பலரும் பாராட்டி வருகின்றனர். இதுபோல பெண்களிடம் கேள்வி கேட்பவர்கள் உண்மையில் புறக்கணிக்கப்பட வேண்டியவர்கள் எனவும், இவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பெண்கள் தங்களை வருத்திக்கொள்ள வேண்டாம் எனவும் பெண்ணியவாதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

**இராமானுஜம்**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share