பிக்பாஸ்5 : இறுதி போட்டியாளரான நிரூப்; இந்த வாரம் வெளியேறபோவது யார்?

Published On:

| By Balaji

பிக்பாஸ் தமிழ் ஐந்தாவது சீசன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடந்த டாஸ்க்கில் வெற்றி பெற்று இறுதி போட்டியாளராக அமீர் வெற்றி பெற்றார். சிபியும் 12 லட்சம் பணத்தொகையுடன் வெளியேறிய பின்பு தற்போது ராஜூ, பிரியங்கா, அமீர், பாவனி, தாமரை, நிரூப் ஆகிய ஆறு பேர் இறுதிக்கட்டத்தில் உள்ளனர்.

இதில் நேற்று நடந்த Dare டாஸ்க்கில் தங்கள் உண்மையான குணாதிசயத்தை மறைத்து பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக போலியாக இருந்து யார் இறுதி வரை வந்துள்ளார்கள் என அனைத்து போட்டியாளர்களும் ஒரு மனதாக ஒரு நபரை தேர்ந்தெடுத்து, அவரை இரண்டாவது இறுதி போட்டியாளராக அனுப்ப வேண்டும் என்பதுதான் டாஸ்க். இதில் பல விவாதங்களுக்கு பிறகு நிரூப் தவிர மற்ற போட்டியாளர்கள் பாவனியை தேர்ந்தெடுக்க பிக்பாஸ் அதை நிராகரித்து விட்டார்.

நிரூப் தான் செல்ல வேண்டும் என்று விவாதம் செய்ய, பிறகு மற்ற போட்டியாளர்களும் அதை ஒத்துக் கொள்ள, பிக்பாஸ் அவரை இரண்டாவது இறுதி போட்டியாளராக அறிவித்தார். இந்த வாரம் குறைந்த வாக்குகள் அடிப்படையில் நிரூப் வெளியேற்றப்படுவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் அவர் இரண்டாவது இறுதி போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதனால் இந்த வாரம் தாமரை அல்லது பாவனி இரண்டு பேரில் யாராவது ஒருவர் வெளியேற்றப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தாமரை, பாவனி இருவருமே குறைந்த அளவிலான வாக்குகள் வித்தியாசத்தில் உள்ளனர். எனவே யார் வெளியேற்றப்படுகிறார் என்பது ஞாயிறன்று வெளியாகும் எபிசோட்டில் உறுதி செய்யப்படும்.

**ஆதிரா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share