பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் 40வது படம் ‘எதற்கும் துணிந்தவன்’. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரானது சூர்யாவின் பிறந்த நாளன்று வெளியானது. அதே நாளில், இன்னொரு படத்தின் டைட்டிலும் வெளியானது.
சூர்யா நடிக்கும் 39வது படத்தை த.செ.ஞானவேல் இயக்கிவருகிறார். அசோக் செல்வன் நடித்து வெளியான ’கூட்டத்தில் ஒருத்தன்’ படத்தை இயக்கியவர். இந்தப் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் சூர்யா நடிக்கிறார் என்று சொல்லப்பட்டது. தற்பொழுது, படத்தில் முக்கிய லீடாக சூர்யா இருப்பார் என்று சொல்லப்படுகிறது. இந்தப் படத்தின் டைட்டிலாக ‘ஜெய்பீம்’ அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டைட்டிலால் சூர்யாவுக்கு மிகப்பெரிய வரவேற்பும் பாராட்டும் குவிந்து வருகிறது.
ஜெய்பீம் டைட்டில் எப்படி படத்துக்குள் வந்தது என விசாரித்தால், ஆச்சரியமான தகவல்கள் கிடைத்தது. இந்தியள���ில் இந்தப் படத்தினைக் கொண்டுச் செல்ல படக்குழு விரும்புகிறதாம். அப்படியான, கதைக்களத்துடன் படம் உருவாக்கப்பட்டிருக்கிறதாம். அதனால், இந்தியளவில் பரிட்சயமான ஒரு தலைப்பை தேடியிருக்கிறது படக்குழு. உதாரணமாக, ஆர்ட்டிகிள் 15 மாதிரியான பொதுவான தலைப்புகளைத் தேடியிருக்கிறார்கள்.
அதே நேரத்தில், வைப்ரண்டாகவும் இருக்க வேண்டுமென்றும் படக்குழு எதிர்பார்த்திருக்கிறது. இறுதியாக, ஜெய்பீம் டைட்டில் வைக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறார்கள். டைட்டிலை பதிவு செய்வதற்காக சென்ற இடத்தில், ஏற்கெனவே இந்தப் பெயரை மற்றுமொரு இயக்குநர் பதிவு செய்து வைத்திருந்திருக்கிறார். அவர் வேறுயாருமில்லை, இயக்குநர் பா.ரஞ்சித்.
ஏற்கெனவே, ஜெய்பீம் எனும் தலைப்பினை ரஞ்சித் பதிவு செய்து வைத்திருக்கும் தகவல் உறுதியானது. சூர்யாவின் 2டி நிறுவனத்திலிருந்து இந்த தலைப்புக்காக ரஞ்சித்தை அ���ுகியிருக்கிறார்கள். சூர்யா மாதிரியான மிகப்பெரிய நடிகர் நடிப்பதால், இந்த டைட்டிலும், சொல்லப்படும் கருத்தும் மிகப்பெரியளவில் அதிர்வலையை ஏற்படுத்தும் என்பதால் உடனே தலைப்பை விட்டுக் கொடுத்தாராம் ரஞ்சித்.
இந்த மாதிரியான டைட்டில் குழப்பங்கள் அடிக்கடி தமிழ் சினிமாவில் நடக்கும். கதைக்கு எற்ற டைட்டிலை பதிவு செய்ய செல்லும் போது, யாரோ ஒருவர் அந்த டைட்டிலை ஏற்கெனவே பதிவு செய்து வைத்திருப்பார். பின்னர், பேச்சுவார்த்தை நடத்தி டைட்டிலைப் பகிர்ந்துகொள்வார்கள் இயக்குநர்கள். சிலர் டைட்டிலுக்கு பெரும் தொகையை கேட்பதெல்லாம் நடக்கும். ஆனால், எந்த வித எதிர்பார்ப்புமின்றி டைட்டிலை கொடுத்திருக்கிறார் ரஞ்சித்.
பா.ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடிக்க மெட்ராஸ் படம் வெளியான நேரத்திலேயே, சூர்யாவுக்கு ஒரு கதை சொன்னார் ரஞ்சித். ஆனால், அந்தப் படத்தில் நடிக்க மறுத்துவ���ட்டார் சூர்யா. அந்தப் படம் தான், இப்போது ஆர்யா நடித்து வெளியான சார்பட்டா பரம்பரை.
**- தீரன்**
�,