நடிகர் சூர்யாவுக்கு இந்த வருடத்தில் மிகப்பெரிய வெற்றியாக அவர் வழக்கறிஞர் ஆக நடித்த ‘ஜெய்பீம்’ அமைந்துவிட்டது. அடுத்ததாக, சூர்யா நடிப்பில் வெளியீட்டுக்கு தயாராக இருக்கும் படம் ‘எதற்கும் துணிந்தவன்’.
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதமே முடிந்துவிட்டது. இந்தப் படத்தைத் தொடர்ந்து, மூன்று படங்களில் நடிக்க ஏற்கனவே ஒப்பந்தமாகியிருக்கிறார் நடிகர்சூர்யா. வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்’, சிறுத்தை சிவா இயக்கத்திலும், பாலா இயக்கத்திலும் நடிக்க இருக்கிறார்.
ஆனால், இந்த மூன்றில் எந்தப் படம் முதலில் தொடங்கப்படும் என்பது சிதம்பர ரகசியமாக இருக்கிறது. ஏனெனில், சூரி, விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகிவரும் ‘விடுதலை’ படத்தின் பணிகள் இன்னும் முடியவில்லை. அதனால், வெற்றிமாறனும் வாடிவாசல் படப்பிடிப்பை தொடங்க தயாராகவில்லையாம். அதுபோல, சமீபத்தில் தான் அண்ணாத்த வெளியானதால், சிறுத்தை சிவாவும் சூர்யாவுக்கான கதை எழுதும் பணியில் தான் இருக்கிறாராம். தவிர, இயக்குநர் பாலாவும் ஸ்கிரிப்ட் பணிகளில் தான் தீவிரமாக இருக்கிறாராம். மூன்று படங்களுமே மிகப்பெரிய இயக்குநர்கள், மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் தயாரிக்கும் படம். ஆனால், முதலில் எந்தப் படம் துவங்குமென்பது தெரியாத நிலையில் துபாய்க்கு ஓய்வு எடுக்க குடும்பத்துடன் சென்றுள்ளார் சூர்யா.
**இராமானுஜம்**
�,