J‘கேஜிஎஃப்-2’ ரிலீஸ் எப்போது?

entertainment

கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் 2018ஆம் ஆண்டு கேஜிஎஃப் படம் வெளியானது. கன்னட நடிகர் நாயகனாக நடித்த ஒரு படம், அகில இந்திய அளவில் வசூல் ரீதியாக முதன்முறை வெற்றி பெற்றது. தற்போது கேஜிஎஃப் பாகம்-2 படத்தின் படப்பிடிப்பு முடிந்து, வெளியீட்டுக்கு தயாராக இருந்த நிலையில் கொரோனா பொது முடக்கம் காரணமாக திட்டமிட்ட அடிப்படையில் படங்கள் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது
தற்போது கேஜிஎஃப் பாகம்-2 படத்தின் டிரெய்லர் மார்ச் 27ஆம் தேதி மாலை 6.40 மணிக்கு வெளியாக உள்ளதாகவும், ஏப்ரல் 14ஆம் தேதி உலகம் முழுக்க தியேட்டர்களில் படம் வெளியாக உள்ளதாகவும் படக்குழு அறிவித்துள்ளது.
கன்னடம், தெலுங்கு, இந்தி, தமிழ், மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியாக உள்ள இந்தப் படத்தில் யாஷ், சஞ்சய் தத், ஸ்ரீநிதி செட்டி, ரவீனா டாண்டன், பிரகாஷ் ராஜ் உட்பட பலர் நடித்துள்ளார்கள். இந்திய சினிமா எதிர்பார்க்கும் முக்கியமான படங்களில் ‘கேஜிஎஃப்’ படமும் ஒன்றாக இருக்கிறது.
**- அம்பலவாணன்**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *