நடிகர் விஜய்யின் ‘பீஸ்ட்’ ஆடியோ வெளியீடு எப்போது?

entertainment

நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள ‘பீஸ்ட்’ திரைப்படத்தின் ஆடியோ வெளியீடு எப்போது என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

‘டாக்டர்’ பட வெற்றிக்கு பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கும் திரைப்படம் ‘பீஸ்ட்’. முதல் முறையாக நெல்சன், விஜய் இணைகிறார்கள் என்பதால் ரசிகர்களிடையே எதிர்ப்பார்ப்பு உள்ளது. இந்த படத்தில் பூஜா ஹெக்டே, இயக்குநர் செல்வராகவன், ரெடின் கிங்க்ஸ்லே ஆகியோர் நடிக்கின்றனர்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் காதலர் தினத்தை முன்னிட்டு இந்த படத்தின் முதல் சிங்கிள் வெளியானது. சிவகார்த்திகேயன் நடிகர் விஜய்க்காக எழுதிய ‘அரபிக்குத்து’ பாடல் வெளியான சில நாட்களிலேயே 125 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது. மேலும், இப்போது வரையிலுமே இளைஞர்களிடையே இந்த பாடல் சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கோடை விடுமுறையை ஒட்டி இந்த திரைப்படம் அடுத்த மாதம் 14ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், இதன் ஆடியோ லான்ச் எப்போது என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த மாதம், அதாவது மார்ச் 20ஆம் தேதி ‘பீஸ்ட்’ படத்தின் ஆடியோ லான்ச் நடக்கவுள்ளது. இதற்கு முன்பு ‘மாஸ்டர்’, ‘புலி’ உள்ளிட்ட படங்களில் ஆடியோ வெளியீட்டின்போது நடிகர் விஜய்யின் மேடை பேச்சுகள் ரசிகர்களிடையே வைரலானது. இதனால், ‘பீஸ்ட்’ பட ஆடியோ லான்ச்சின் போது விஜய் என்ன பேசுவார் என்ற எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

’பீஸ்ட்’ படத்திற்கு பிறகு, வம்சி இயக்கத்தில் தமிழ் தெலுங்கு பைலிங்குவலாக தனது 66வது படத்தில் நடிக்கிறார் நடிகர் விஜய். இதனையடுத்து, மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்தான அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் அடுத்தடுத்து வரும் என எதிர்பார்க்கலாம்.

**ஆதிரா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.