ஆனந்த் சங்கர் இயக்கத்தில், தமன் இசையமைப்பில், விஷால், ஆர்யா, மிர்ணாளினி ரவி மற்றும் பலர் நடிப்பில் கடந்த வருடம் தீபாவளி அன்று அண்ணாத்தே படத்துடன் வெளிவந்த படம் எனிமி.
தயாரிப்பாளருக்கு சில கோடிகளை நஷ்டப்படுத்திய படம் எனிமி. இப்படத்தில் இடம் பெற்ற ‘டம் டம்’ என்ற பாடல் கடந்த வருடத்தின் சூப்பர் ஹிட் பாடல்களில் ஒன்றாக அமைந்தது. இப்பாடல் தற்போது 100 மில்லியன் பார்வைகளை யூடியூப்பில் கடந்துள்ளது.
இரண்டே மாதத்தில் இந்தப் பார்வைகளைப் பெற்றுள்ளது படக்குழுவினருக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஷால் நடித்த பாடல் ஒன்று 100 மில்லியன் பார்வைகளைப் பெறுவது அவரது திரையுலக வாழ்க்கையில் இதுவே முதல் முறை. இதற்கு முன்பு அவர் நடித்த பல படங்களின் பாடல்கள் பிரபலமாகியிருந்தாலும், அதில் ஒரு பாடல் கூட யூடியூப்பில் 100 மில்லியன் பார்வைகளை எட்டியது இல்லை என்கின்றனர் ஆடியோ வட்டாரத்தில்.
கடந்த வருடம் வெளிவந்த படங்களில் மாஸ்டர்படத்தின் வாத்தி கம்மிங்,ஈஸ்வரன் படத்தின் மாங்கல்யம், டாக்டர் படத்தின் செல்லம்மா ஆகிய பாடல்கள் மட்டுமே 100 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. இப்போது எனிமி படத்தின் ‘டம் டம்’ பாடல் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளது.
இசையமைப்பாளர் தமனுக்கு ‘மாங்கல்யம், டம் டம்’ என இரண்டு பாடல்கள்100 மில்லியன் பார்வைகளை கடந்து வாழ்த்துகள் பெற்றுத் தந்துள்ளது.
**-இராமானுஜம்**�,