lஎனிமி நஷ்டம்: விஷால் படத்துக்கு சிக்கல்?

Published On:

| By Balaji

விஷால், ஆர்யா நடிப்பில் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் தயாரிக்கப்பட்ட எனிமி படம் தீபாவளி நாளில் வெளியானது. அந்தப்படம் சுமார் மூன்று கோடிக்கு மேல் நட்டத்தைச் சந்தித்துள்ளதாம்.

இதனால் விஷால் நடிப்பில் தொடங்கவிருக்கும் அடுத்த படம் சிக்கலை எதிர்கொண்டுள்ளது.

எனிமி படத்தைத் தொடர்ந்து புது இயக்குநர் து.பா.சரவணன் இயக்கும் வீரமே வாகை சூடும் படத்தில் நடித்திருக்கிறார். விஷாலின் 31 ஆவது படமான இதை விஷால் ஃபிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்திருக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து உள்ளது. விஷாலின் 32 ஆவது படத்தை வினோத்குமார் எனும் புதியவர் இயக்குகிறார். அதை விஷாலின் நெருங்கிய நண்பர்களான நடிகர் நந்தாவும் நடிகர் ரமணாவும் இணைந்து தயாரிக்கிறார்கள். இதையடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் புதிய படமொன்றில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் விஷால்.

விஷாலின் 33 ஆவது படமான இப்படத்தைத் தயாரிக்கவிருப்பது எனிமி படத்தின் தயாரிப்பாளர் வினோத் தயாரிப்பார் என்று கூறப்பட்டது, படத்தின் நாயகி மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடந்துவந்தது. தீபாவளி முடிந்தபின் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் எனச் சொல்லப்பட்டது.

ஆனால், எனிமி படம் எதிர்பார்த்த வசூல் செய்யவில்லை என்பதால் புதிய படத்துக்கு விஷால் கேட்கும் சம்பளத்தைத் தரமுடியாது, சம்பளத்தைக் குறைத்தாக வேண்டும் என்று தயாரிப்புத் தரப்பில் சொல்லப்படுகிறதாம்.ஆனால், பேசிய சம்பளத்தைக் கொடுத்தால்தான் நடிப்பேன் என்கிறாராம் விஷால்.

இதனால் அந்தப்படம் தொடங்கப்படுமா அல்லது வினோத் பொதுவெளியில் விஷால் கேட்கும் அதிகபட்ச சம்பளம், எனிமி படத்தால் ஏற்பட்ட நஷ்டத்தை பற்றி பேசுவாரா என்கிற கேள்வி, எதிர்பார்ப்பு கோடம்பாக்கத்தில் எழுந்திருக்கிறது.

**-அம்பலவாணன்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share