நடிகர் விக்ரமின் ‘மகான்’ திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் முதல் முறையாக இணைந்து நடிக்கும் படம் ‘மகான்’. இந்த படம் நேரடி ஓடிடி ரிலீஸ் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அடுத்த மாதம் அதாவது பிப்ரவரி 10ஆம் தேதி அமேசான் ஓடிடி தளத்தில் ‘மகான்’ திரைப்படம் நேரடியாக வெளியாகிறது. கொரோனா பரவல் அதிகமுள்ள நிலையில் இந்த படம் நேரடியாக ஓடிடியில் வெளியிடுவதாக படக்குழு தெரிவித்துள்ளது. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் படம் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். சிம்ரனும் இந்த படத்தில் நடித்துள்ளார். தன் குடும்பத்தை விட்டு விலகி தனக்கான வாழ்க்கையை தேடிய ஒருத்தன் மீண்டும் தன் குடும்பத்துடன் இணைய வேண்டும், தன் மகனுக்கு தந்தையாக இருக்க வேண்டும் என விரும்புகிறான். அவன் வாழ்க்கையில் எடுக்கும் இந்த முடிவில் அவன் மகனுக்கு தந்தையாக இருக்கும் வாய்ப்பு கிடைத்ததா என்பதே இந்த படத்தின் கதை என்ற தகவலும் தற்போது வெளியாகி இருக்கிறது. சஸ்பென்ஸ், ஆக்ஷன் தழுவி இந்த கதை உருவாக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் ‘ஜகமே தந்திரம்’ படம் நேரடியாக நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. அதனை அடுத்து இந்த வருடம் ‘மகான்’ கார்த்திக் சுப்பராஜின் இரண்டாவது படமாக ஓடிடியில் நேரடியாக வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
**ஆதிரா**
�,