Sகமலின் அடுத்த ஷுட்டிங் ஸ்பாட்!

Published On:

| By Balaji

கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தின் நான்காம் கட்டப் படப்பிடிப்பு கோவையில் துவங்கியிருக்கிறது.

மாஸ்டர் படத்திற்கு பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ‘விக்ரம்’ படத்தை இயக்கி வருகிறார். கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், காளிதாஸ் ஜெயராம், நரேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கடந்த ஜூலை மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. கடந்த மாத இறுதியில் தாம்பரத்தில் இப்படத்தின் மூன்றாம் கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், தற்போது கோவையில் நான்காம் கட்டப் படப்பிடிப்பு நேற்று முதல் தொடங்கியுள்ளது.

இதில், கமல்ஹாசன், ஃபகத் ஃபாசில், விஜய் சேதுபதி காட்சிகள் படமாக்கப்படவுள்ளன. தொடர்ச்சியாக ஒரு மாதம் கோவையில் படப்பிடிப்பு நடைபெறுகிறது. இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

**-அம்பலவாணன்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share