தளபதி64: ரசிகனின் பிறந்தநாள் கொண்டாடிய விஜய் சேதுபதி

Published On:

| By Balaji

எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் விஜய் நடித்துவரும் தளபதி 64 திரைப்படத்தின் படப்பிடிப்பு கர்நாடகாவில் நடைபெற்று வருகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் இந்தப்படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்து வருகிறார். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். மேலும், ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ், ரமேஷ் திலக், சின்னத்திரை தொகுப்பாளினி ரம்யா உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துவருகின்றனர்.

படத்தின் ஆரம்பகட்ட படப்பிடிப்பு கர்நாடக மாநிலத்திலுள்ள ஷிமோகா சிறைச்சாலையில் நடைபெற்றுவந்தது. இந்தநிலையில் கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடுவதற்காக விஜய் குடும்பத்துடன் லண்டன் சென்றிருந்தார். எனினும் மற்ற நடிகர்கள் சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டுவந்தது. தற்போது படத்தின் வில்லனாக நடிக்கும் விஜய் சேதுபதி ஷிமோகா சிறைச்சாலையில் நடக்கும் படப்பிடிப்பில் இணைந்துள்ளார்.

விஜய் சேதுபதி தனது ரசிகர்களை எப்போதும் சிறப்பாகக் கவனித்து வருகிறார். ரசிகர்களுடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் ஏராளமாக வலம்வருகின்றன. இந்த நிலையில் தளபதி 64 படப்பிடிப்பிலும் தனது ரசிகரின் விருப்பத்தை நிறைவேற்றி அவர் மனம்கவர்ந்துள்ளார். படப்பிடிப்பில் கலந்து கொண்ட விஜய் சேதுபதியிடம் ரசிகர் ஒருவர் தனது பிறந்தநாள் என்பதைத் தெரிவிக்க, உடனடியாக அவரது விருப்பத்திற்கு ஏற்றவாறு கேக் வெட்டியதோடு, அவருக்கு ஊட்டியும் மகிழ்ந்தார். இது தொடர்பான வீடியோ தளபதி64 என்னும் டிவிட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel