விஜய் நடிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் 65 படம் உருவாகிவருகிறது. இந்தப் படம் குறித்த புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிப்பில் உருவாக இருக்கும் ‘விஜய் 65’ படத்தினை நெல்சன் இயக்க இருக்கிறார். நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா பட இயக்குநர் நெல்சன். தற்பொழுது இவர் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ‘டாக்டர்’ படம் வருகிற மார்ச் 26ஆம் தேதி வெளியாகிறது.
டாக்டர் படத்தின் ஃபைனல் எடிட் பணிகளை முடித்து படத்தைக் கொடுத்துவிட்டார் நெல்சன். அடுத்தக் கட்டமாக விஜய் 65 படத்தின் பணிகளைத் துவங்கிவிட்டார். இந்தப் படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு ரஷ்யாவில் நடக்க இருக்கிறது என்று ஏற்கெனவே கூறியிருந்தோம். அதோடு, ஏப்ரல் முதல் வாரத்தில் படப்பிடிப்புக்கு படக்குழு கிளம்புகிறார்கள் என்று சொல்லப்பட்டது.
முதல்கட்டமாக, லொக்கேஷன் தேடும் வேட்டையில் இறங்கியிருக்கிறார் நெல்சன். அதற்காக, ரஷ்யா சென்றிருக்கிறார் இயக்குநர். அதை உறுதி செய்யும் விதமாக, இன்ஸ்டாவில் ரஷ்யாவின் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
https://www.instagram.com/p/CMBraA0BdTO/?utm_source=ig_embed&utm_campaign=loading
ரஷ்யா படப்பிடிப்பை முடித்துவிட்டு, சென்னையில் மீதிக் காட்சிகளை படமாக்க இருக்கிறதாம் படக்குழு. பிஸியான சென்னை மாநகருக்குள் ரசிகர்களின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு படமெடுப்பதெல்லாம் நிச்சயம் சாதாரண விஷயமல்ல. நிச்சயம் பெரிய சவாலாக இருக்கும் என்றே கணிக்கப்படுகிறது.
இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாக ஒரு தகவல். படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
**- ஆதினி**
�,