கடந்த சில தினங்களாக விஜய் படம் குறித்த பல தகவல்கள் இணையத்தில் உலாவந்துகொண்டிருக்கிறது. மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து விஜய் தன்னுடைய 65வது படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தை நெல்சன் இயக்க சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துவருகிறது.
அனிருத் இசையமைக்க, விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். அதோடு, யோகிபாபு காமெடி ட்ராக்கில் வருகிறார். இந்தப் படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்துமுடிந்திருக்கிறது. இந்நிலையில், படத்தின் பெரும்பாலான காட்சிகளை சென்னையில் படமாக்க இருக்கிறது படக்குழு. அதற்காக, பிரதான செட் ஒன்றும் தயாராகியிருக்கிறது. அதாவது, மால் செட் ஒன்றில் படப்பிடிப்பு நடத்த இருக்கிறார்கள். லாக்டவுனுக்கு இந்த மால் செட் ரெடியாகிவிட்டது.
இந்நிலையில், புது அப்டேட் என்னவென்றால், மற்றுமொரு செட் ஒன்றும் தயாராகிவருகிறதாம். அந்த செட்டில் பாடல் காட்சியை பதிவு செய்ய இருக்கிறது படக்குழு. அதில், விஜய், பூஜா ஹெக்டே பங்கேற்பார்கள் என்றும், படப்பிடிப்பை ஜூலை 1ஆம் தேதி துவங்கவும் திட்டம். தேதி வரையிலும் உறுதிசெய்யவும் காரணம் இருக்கிறது. தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைந்துவருவதால், அடுத்த வாரங்களில் படப்பிடிப்புக்கான தளர்வு கிடைத்துவிடும். எப்படியும், குறைந்த நபர்களே ஆரம்பக்கட்டத்தில் பணியாற்ற அனுமதிப்பார்கள் என்பதை மனதில் கொண்டே பாடல் காட்சிக்கான ஷூட்டிங்கோடு படப்பிடிப்பைத் துவங்குகிறார்கள். மால் செட்டில் ஷூட்டிங் என்றால் அதிக நபர்கள் நடிக்க வேண்டியிருக்கும் என்பதால் இந்த திட்டம்.
விஜய் பிறந்த தினம் வருகிற ஜூன் 22ஆம் தேதி என்பதால், இதுவரை விஜய் நடித்த 64 படங்களின் புகைப்படங்களும் இடம்பெறும் போஸ்டர் ஒன்று வெளியாகி, இணையத்தில் வைரலாகிவருகிறது. இந்நிலையில், விஜய் 65 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வேண்டுமென ட்விட்டரில் கோரிக்கையை பறக்கவிட்டனர் விஜய் ரசிகர்கள்.
படக்குழுவுக்கு விஜய் பிறந்த தினத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடும் திட்டம் ஏதும் இல்லையாம். ரசிகர்கள் இணையத்தில் கோரிக்கையை வைத்து, எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியதால் ‘ரசிகர்கள் ஏமாந்துவிடக் கூடாது’ என்று தயாரிப்புத் தரப்புக்கு விஜய் வலியுறுத்தியதாகச் சொல்லப்படுகிறது. அதன்படியே, நேற்று சன்பிக்சர்ஸ் நிறுவனம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்த அறிவிப்பை வெளியிட்டது. அந்த அறிவிப்பில் விஜய் 65 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகிற ஜூன் 21 மாலை வெளியாக இருப்பது உறுதியானது.
விஜய் 65 படக்குழுவின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்குப் பிறகு, ஃபர்ஸ்ட்லுக் எப்படி இருக்கப் போகிறதென எதிர்பார்ப்புடனும், கனவுடனும் இருக்கிறார்கள் ரசிகர்கள். இதுவரை விஜய் எடுக்காத புது அவதாரமாக இந்தப் படம் இருக்கும் என்கிறார்கள் படக்குழுவில் பணியாற்றுபவர்கள். விஜய்யை வித்தியாசமான விதத்தில் காட்ட இருக்காராம் நெல்சன். அதோடு, விஜய்க்கென ப்ரத்யோகமான ஃபர்ஸ்ட் லுக் தயாராகிவருகிறதாம்.
இந்நேரத்தில், விஜய்க்கென ரசிகர்கள் தயார் செய்யும் போஸ்டர்களும் இணையத்தில் ஷேர் ஆகிவருகிறது. அதோடு, விஜய் பிறந்த தினத்தில் இரத்த தானம், கொரோனா நிவாரணம் வழங்குதல் உள்ளிட்ட பலவகையான நலத்திட்ட உதவிகளையும் மேற்கொள்ள ரசிகர்கள் திட்டமிட்டுள்ளனர்.
**- ஆதினி**
.�,