முத்தமிட்டு மாரிசெல்வராஜிடம் விஜய்சேதுபதி சொன்ன வார்த்தை

entertainment

தமிழ் திரையுலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது கர்ணன். தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கலைப்புலி.எஸ்.தாணு தயாரிப்பில் கடந்த ஏப்ரல் 09ஆம் தேதி வெளியான படம் ‘கர்ணன்’.

தனுஷூடன் லால், ரஜிஷா விஜயன், கெளரி கிஷன், யோகிபாபு, பூ ராமு, ஜி.எம்.குமார், லட்சுமி ப்ரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கர்ணனாக தனுஷூம், எமராஜாவாக லாலும் நடிப்பில் உச்சம் தொட்டிருக்கிறார்கள். ரிலீஸான வெள்ளிக்கிழமை 100% திரையரங்க அனுமதியுடனும், நேற்றிலிருந்து 50% இருக்கை அனுமதியுடனும் திரையில் ஓடிக்கொண்டிருக்கிறது. இருப்பினும், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.

கர்ணன் படத்தை திரையரங்கில் பார்த்த ரசிகர்கள் ஒரு பக்கம் கொண்டாடி வரும் நிலையில், படத்தைப் பார்த்த பிரபலங்களும் மாரி செல்வராஜை தொலைப்பேசியில் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

கர்ணன் படத்துக்கான சிறப்பு திரையிடல் ஒன்று நடந்தது. திரைப்பிரபலங்களுக்காக சென்னை பி.வி.ஆர்.திரையரங்கில் இந்த திரையிடல் நடைபெற்றது. இதில் படம்பார்க்க பல திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டனர். அதில் படம்பார்க்க விஜய்சேதுபதியும் வந்திருந்தார். படம் முடிந்து வெளியே வந்த விஜய்சேதுபதி மாரி செல்வராஜை கட்டிப்பிடித்து வாழ்த்து கூறினார்.

மாரி செல்வராஜின் கையில் முத்தமிட்டு அன்பை பரிமாறினார். அதோடு, ‘ படம் ரொம்ப நல்லா இருக்கு. அற்புதமான படம். மனசார சொல்லுறேன், நீ ரொம்ப பெரிய ஆளா வருவே.. லவ் யூ” என்று கூறினார்.

விஜய்சேதுபதியின் வாழ்த்தில் நெகிழ்ந்து போனார் மாரி செல்வராஜ். அதோடு, கர்ணன் படத்தை தவற விட வேண்டாம் எனவும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் விஜய்சேதுபதி.

**- ஆதினி**

.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.