துபாயில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் விஜய் சேதுபதிக்கு சினிமாத் துறையில் செல்வாக்கு மிகுந்த நட்சத்திர விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.
தமிழ் சினிமாவில் இவர் நடித்த படங்கள் ஓடினாலும் ஓடாவிட்டாலும் தொடர்ந்து அதிக படங்களில் நடித்து வரும் நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. கதாநாயகன், வில்லன், குணசித்திர வேடம், கௌரவ தோற்றம் என எல்லா வேடங்களுக்கும் ஏற்றாற்போல் தன்னை மாற்றிக்கொண்டு நடித்து வருபவர் விஜய் சேதுபதி. தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், இந்தி எனப் பல்வேறு மொழி படங்களிலும் நடித்து அகில இந்திய நடிகராகப் பிரபலமாகி உள்ளார்.
கைவசம் காத்துவாக்குல ரெண்டு காதல், யாதும் ஊரே யாவரும் கேளிர், மாமனிதன், கடைசி விவசாயி, விடுதலை, இடம் பொருள் ஏவல், விக்ரம், மெர்ரி கிறிஸ்துமஸ், மும்பை கார் ஆகிய படங்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான படங்களின் படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டுக்குத் தயாராகி வருகின்றன.
இந்த நிலையில் துபாயில் சர்வதேச புரமோட்டர்ஸ் சங்கத்தின் சார்பில் ஐக்கிய அரபு அமீரகத்தின் 50ஆவது பொன் விழா மற்றும் செல்வாக்கு மிகுந்த ஆளுமைகளுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விஜய் சேதுபதிக்கு சினிமாத் துறையில் செல்வாக்கு மிகுந்த நட்சத்திர விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது. விழாவில் கலந்துகொண்டு பேசிய
விஜய் சேதுபதி, சினிமாவுக்கு வரும் முன் தான் மூன்று ஆண்டுகள் துபாயில் பணியாற்றி இருப்பதாகவும், இதனால் துபாய்க்கு வரும்போதெல்லாம் வெளிநாடு போன்ற உணர்வு இல்லாமல், தனது இரண்டாவது தாயகமாகப் பார்ப்பதாகக் கூறியுள்ளார்.
**-இராமானுஜம்**
�,