விஜய்க்கு 118 கோடி, அப்போ இயக்குநருக்கு ? விஜய் 66 பட பட்ஜெட் !
விஜய் நடிப்பில் இந்த வருட ரிலீஸாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் வெளியானது. அடுத்த வருட பொங்கல் ரிலீஸூக்காக நெல்சன் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ தயாராகிவருகிறது.
விஜய்யின் 65வது படமான இதில் நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். வில்லனாக இயக்குநர் செல்வராகவன், காமெடி ரோலில் யோகிபாபு, முக்கிய ரோல்களில் சாக்கோ , அபர்ணா தாஸ், விடிவி கணேஷ், டான்ஸிங் ரோஸ் ஷபீர் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். அனிருத் இசையில் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவில் சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் படம் ஜோராக தயாராகிவருகிறது.
இந்தப் படத்துக்காக மாதத்தின் முதல் 25 நாட்கள் முழுமையாக தேதி ஒதுக்கியிருக்கிறார் விஜய். பொதுவாக, ஞாயிற்றுக் கிழமைகளில் நடிப்புக்கு ரெஸ்ட் கொடுக்கும் விஜய், பீஸ்ட் படத்துக்காக அனைத்து நாட்களிலும் நடிக்கத் தயாராக இருக்கிறார்.
பீஸ்ட் படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் ஜார்ஜியாவில் நடந்தது. அடுத்தடுத்த ஷெட்யூல் சென்னையில் பிரபலமான மூன்று ஸ்டுடியோக்களில் செட் அமைத்து படமாக்கிவருகிறார்கள். எப்படியும், இன்னும் ஓரிரு மாதங்களில் ஒட்டுமொத்த ஷூட்டிங்கையும் முடித்துவிடவும் திட்டமாம்.
இந்நிலையில், விஜய் 66 படம் குறித்த பேச்சுகள் தீவிரமடைந்திருக்கிறது. பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில்ராஜூ படத்தை தயாரிக்கிறார். படத்தை தோழா படத்தை இயக்கிய வம்சி இயக்குகிறார். இந்தப் படத்தை தில்ராஜூவுடன் இணைந்து பிவிஆர் சினிமாஸ் நிறுவனமும் தயாரிப்பதாக ஒரு தகவல். கூடுதல் தயாரிப்பாளருக்கு காரணம் இருக்கிறதாம்.
என்னவென்றால், வம்சியை அறிமுகப்படுத்திய தயாரிப்பு நிறுவனம் பிவிஆர். அந்த நேரத்திலேயே மூன்று படங்களுக்கு ஒப்பந்தமாகியிருக்கிறார் வம்சி. அதனால், விஜய் 66-க்குள் தில்ராஜூவுடன் பார்ட்னராக பிவிஆர் இணைவதற்கான பேச்சுவார்த்தைகள் போய்க் கொண்டிருக்கிறது.
அதோடு, விஜய் 66 படத்துக்கு 180 கோடி பட்ஜெட்டில் எடுத்துவிட திட்டமிட்டிருக்கிறார்கள். அதில், விஜய்க்கு 118 கோடி சம்பளமாம். இயக்குநர் வம்சிக்கு 12 கோடியும், இந்தப் படத்துக்கான திரைக்கதை எழுத இருக்கும் இயக்குநர் ராஜூ முருகனுக்கு 85 லட்சமும் சம்பளம் என்று சொல்லப்படுகிறது. இப்படி, படத்தில் பணியாற்றும் கலைஞர்களுக்கே படத்திலிருந்து முக்கால் பாக பட்ஜெட் போய்விடுகிறதாம். மீதி இருக்கும் 25% பட்ஜெட்டில் படத்தை தயாரிக்க இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
**- தீரன்**
�,