iவிஜய் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டைட்டில்!

Published On:

| By Balaji

தமிழ் சினிமாவின் வசூல் ‘சாம்ராட்’ விஜய். தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத கலைஞன். சினிமா பயணத்தில் 65ஆவது படத்தில் இருக்கிறார். இவரின் படங்கள் குறித்த எந்த அறிவிப்பு வந்தாலும், ரசிகர்களுக்கு பண்டிகை தினமே. விஜய்யின் 47ஆவது பிறந்த தினம் நாளை (ஜூன் 22) ரசிகர்கள் கொண்டாட இருக்கும் நிலையில், விஜய் நடித்துவரும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்ற படம் மாஸ்டர். இந்தப் படத்துக்குப் பிறகு, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய்யின் 65ஆவது படம் உருவாக இருந்தது. ஆனால், அந்த வாய்ப்பு இளம் இயக்குநரான நெல்சன் கைவசம் சென்றது. நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா, சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படங்களின் இயக்குநரே நெல்சன். விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே, காமெடி ரோலில் யோகிபாபு நடிக்க அனிருத் இசையில், சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் படம் உருவாகிவருகிறது.

படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பை ஜார்ஜியாவில் முடித்திருக்கிறது படக்குழு. ஜூலை மாதம் அடுத்தக் கட்டப் படப்பிடிப்பை படக்குழு துவங்க இருக்கிறது. பொதுவாக, ஒரு பெரிய நடிகர் நடிக்கும் படத்தின் பணிகளை தயாரிப்புத் தரப்பு சீக்ரெட்டாக வைத்திருக்கும். ஆனால், சன்பிக்சர்ஸ் படம் பற்றிய அனைத்து அறிவிப்பையும் அவ்வப்போது அறிவித்துக் கொண்டே இருந்தது. எந்த வித வதந்திகளோ, சர்ச்சையோ வந்துவிடக் கூடாதென்பதற்காகவும், ரசிகர்களுக்காகவும் வெளிப்படைத் தன்மையுடன் படமும் உருவாகிவந்தது. பட அறிவிப்பு முதல் ஜார்ஜியா ட்ரிப் வரை அனைத்தையுமே அப்டேட் செய்தது.

இந்நிலையில், விஜய் பிறந்த தின ஸ்பெஷலாக படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும், படத்தின் டைட்டிலையும் அறிவித்துள்ளது படக்குழு. அதன்படி, விஜய் 65 படத்துக்கு BEAST என டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, கையில் துப்பாக்கியுடன் விஜய் இருக்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி இணையத்தில் வரவேற்பைப் பெற்றுவருகிறது.

#Thalapathy65 is #BEAST@actorvijay @Nelsondilpkumar @anirudhofficial @hegdepooja#BEASTFirstLook #Thalapathy65FirstLook pic.twitter.com/Wv7wDq06rh

— Sun Pictures (@sunpictures) June 21, 2021

டார்கெட் ராஜா அல்லது டார்கெட் என படத்தின் டைட்டில் வைக்கப்படலாம் என்று ஒரு பேச்சு இருந்தது. இந்நிலையில், பீஸ்டு என டைட்டில் வைத்திருக்கிறார்கள்.

**-ஆதினி**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share