200 கோடியை தொட்டுவிட்டதா மாஸ்டர்? விஜய்யின் 200 கோடி க்ளப் படங்கள்!

Published On:

| By Balaji

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த ஜனவரி 13ஆம் தேதி வெளியான படம் மாஸ்டர். விஜய்க்கு வில்லனாக பவானி கேரக்டரில் விஜய்சேதுபதி நடித்திருந்தார். நாயகியாக கல்லூரி பேராசிரியராக மாளவிகா மோகனன் நடித்திருப்பார். விஜய்யின் தோழியாக ஆண்ட்ரியா படத்தில் வருவார். கல்லூரி மாணவர்களாக சாந்தனு, 96 நாயகி கெளரி கிஷன் நடித்திருப்பார்கள். விஜய்சேதுபதியின் அடியாளாக அர்ஜூன் தாஸ் படத்தில் நடித்திருப்பார்.

கல்லூரிப் பேராசிரியரான ஜே.டி. பணிமாற்றலாக சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் மாஸ்டராகச் செல்கிறார். அங்கு நடக்கும் அட்டூழியங்களை ஒழித்து வில்லன் பவானியை சுளுக்கெடுப்பார் ஜே.டி. இதுவே படத்தின் ஒன்லைன். யு/ஏ சான்றிதழுடன் படம் வெளியானது.

அனிருத் இசையில் பாடல்களும் செம ஹிட். படத்திற்கு முதலீடு செய்த பணம் கிடைத்தால் போதும் என்றே எதிர்பார்க்கப்பட்டு வெளியான நிலையில், விஜய் படங்களிலேயே அதிக வசூல் சாதனை செய்திருக்கும் படமாக மாறியிருக்கிறது மாஸ்டர்.

மெர்சல் படத்திலிருந்தே விஜய்யின் வசூல் சாதனை ஒவ்வொரு படத்திலும் கூடிக்கொண்டே போய்க் கொண்டிருக்கிறது. அந்த வகையில் இறுதியாக பிகில் படைத்த வசூலை, மாஸ்டர் மிஞ்சிவிடும் என்றே கணிக்கிறார்கள் டிரேடிங் வட்டாரத்தினர்.

டிரேடிங் வட்டாரத்திலிருந்து கிடைத்த லேட்டஸ்ட் அப்டேட் என்னவென்றால், ஒன்பது நாட்களில் 200 கோடியை மாஸ்டர் தாண்டிவிட்டதாகச் சொல்லப்படுகிறது. ரசிகர்கள் #MasterEnters200CrClub எனும் ஹேஷ்டேக்கினை டிரெண்ட் செய்துவருகிறார்கள்.

மெர்சல், சர்க்கார், பிகில் வரிசையில் மாஸ்டரும் 200 கோடி ரூபாயை தொட்டுவிட்டதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

**ஆதினி**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share