தந்தை மீது வழக்கு போட்ட விஜய்

entertainment

தமிழ் சினிமா நடிகர்களில் பலருக்கும் அரசியல் ஆசையும், எந்தவிதமான கஷ்டத்தையும் எதிர்கொள்ளாமல் முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்துவிட வேண்டும் என்கிற பேராசையும் அதிகம் இருக்கிறது.

இதில் துணிந்து அரசியல் களம் கண்டவர் நடிகர் விஜயகாந்த் மட்டுமே. பலம் பொருந்திய அரசியல் தலைவர்கள் இருக்கும்போது அவர்களை நேரடியாக அரசியல் களத்தில் எதிர்கொள்ள சங்கடப்பட்டு தாமதமாக கட்சி தொடங்கியவர் கமல்ஹாசன்.

நடிகர் ரஜினிகாந்த் குழம்பிய அரசியல் குட்டையில் மீன் பிடிக்க திட்டம் தீட்டி அதனை நடைமுறைக்கு கொண்டுவராமலே அரசியல் சதுரங்கத்தில் இருந்து விலகிப்போனார்.

தற்போது நடிகர் விஜய் அரசியல் களத்தில் தனது பலம் என்ன என்பதை பரிசோதிக்கும் முயற்சியில் ஈடுபடத் தொடங்கியுள்ளார். கமல் கட்சி தொடங்கி தேர்தலிலும் போட்டியிட்டார். ரஜினிகாந்த் அரசியல் பேசி விலகிப்போனார். ஆனால் நடிகர் விஜய் இந்த வரையறைக்குள் வரவில்லை. ஆனால் தேர்தல் களத்தில் அவரது மக்கள் இயக்கம் போட்டி போட தயாராகி வருகிறது.

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் அக்டோபர் 6 மற்றும் 9-ம் தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறுகிறது. இந்த தேர்தலில் நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் போட்டியிடும் என்று அதிகாரபூர்வமான அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் மக்கள் இயக்க மாநில பொதுசெயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 20 மாவட்ட நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

விஜய்யின் மக்கள் இயக்கம் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும். ஆனால் நடிகர் விஜய்யின் பெயரை, மக்கள் இயக்கத்தை பயன்படுத்தாமல் சுயேட்சையாக போட்டியிட வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த 128 பேர் சுயேட்சையாக போட்டியிட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தற்போதைய தமிழக அரசியல் சூழலில் திமுகவை எதிர்த்து அரசியல் பேச வேண்டும். இதனால் தொழில்ரீதியாகதான் பாதிக்கப்பட கூடும், அதனால் பிரச்சாரத்திற்கு அவரது பெயரை பயன்படுத்தக்கூடாது, என நிபந்தனை விதித்திருக்கிறார்.

அத்துடன் இல்லாமல் தனது பெயரையோ, தனது ரசிகர் மன்றத்தின் பெயரையோ பயன்படுத்துவதை தடை செய்யக் கோரி தனது தந்தை மற்றும் தாய் உட்பட 11 நபர்கள் மீது நடிகர் விஜய் சென்னை சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு இம்மாத இறுதியில் விசாரணைக்கு வர இருக்கிறது.

**-இராமானுஜம்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *