சஸ்பென்ஸ் த்ரில்லரில் விஜய் ஆண்டனி நடிக்கும் ‘கொலை’

Published On:

| By Balaji

:

கோடியில் ஒருவன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இன்ஃபினிட்டி பிலிம் வென்ச்சர்ஸ் நிறுவனம், மற்றும் லோட்டஸ் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் மீண்டும் விஜய் ஆண்டனி நடிக்கும் படத்தை தயாரிக்கின்றன.

‘விடியும் முன்’ படத்தின் இயக்குநரான பாலாஜி கே.குமார் இயக்கும் இந்த சஸ்பென்ஸ் த்ரில்லர் படத்திற்கு ‘கொலை’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் இதுவரையிலும் நடித்திராத ஒரு கதாப்பாத்திரத்தில் விஜய் ஆண்டனி நடிக்க இருப்பதாக இயக்குநர் கூறுகிறார்

மேலும் இந்தப் படத்தில் ரித்திகா சிங், மீனாட்சி சவுத்ரி, ராதிகா சரத்குமார், முரளி சர்மா, சித்தார்த்தா ஷங்கர், அர்ஜுன் சிதம்பரம், கிஷோர் குமார் மற்றும் சம்கித் போஹ்ரா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

விடியும் முன்படத்திற்குஒளிப்பதிவு செய்த சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்கிறார். மெரினாமற்றும் நெற்றிக்கண்,புகழ் கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைக்கிறார்.

‘விடியும் முன்’ படத்தின் மூலம் தமிழ்ச் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பெற்றிருக்கும் இயக்குநர் பாலாஜி கே.குமார், தற்போது மீண்டும் ஒரு சுவாரஸ்யமான கதைக் களத்துடன் இந்தப் படத்தில் விஜய் ஆண்டனியுடன் களமிறங்கியுள்ளார். “இந்தக் ‘கொலை’ திரைப்படம் பார்வையாளர்களை அவர்களின் இருக்கைகளின் விளிம்பில் வைத்திருக்கும்” என்கிறார் இயக்குநர்.2022-ம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தக் ‘கொலை’ திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

**-இராமானுஜம்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share