விஜய் 66 இயக்குநர்: குழப்பத்தை ஏற்படுத்தும் சம்பவங்கள்!

entertainment

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்யின் 64ஆவது படமாக ‘மாஸ்டர்’ இந்த வருடத்தின் தொடக்கத்தில் வெளியானது. படமும் வெளியாகி சூப்பர் ஹிட். திரையரங்கில் வெளியாகி சில நாட்களிலேயே ஓடிடிக்கு வந்து பெரிய ஹிட் கொடுத்தது.

மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து, விஜய்யின் 65ஆவது படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குவார் என்று சொல்லப்பட்டது. திடீர் திருப்பமாக, படத்துக்குள் டாக்டர் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் வந்தார்.

நெல்சன் இயக்க சன் பிக்சர்ஸ் தயாரிக்க ‘பீஸ்ட்’ எனும் பெயரில் படம் உருவாகிவருகிறது. முதல்கட்டப் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் தொடங்கியது. இரண்டாம்கட்ட ஷூட்டிங் சென்னையில் செட் அமைத்து நடந்துவருகிறது. விஜய்க்கு நாயகியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். அனிருத் இசையமைக்க, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு மேற்கொண்டு வருகிறார்.

விஜய் 65இல் ஏ.ஆர்.முருகதாஸ் என சொல்லப்பட்டு நெல்சன் படத்துக்குள் வந்தார். தற்பொழுது, விஜய் 66 படத்தின் இயக்குநர் யாரென்பது மிகப்பெரிய குழப்பத்தை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகிறது.

விஜய்யின் அடுத்த படத்தை தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்க இருப்பதாகக் கூறப்பட்டது. வம்சியுமே வெளிப்படையாக இதுகுறித்துப் பேசினார். அதன்பிறகு, ஒரு சத்தமும் இல்லை. நேர்காணலில் வெளிப்படையாக விஜய்யை இயக்குவதை வம்சி கூறியது விஜய் தரப்புக்குப் பிடிக்கவில்லை. அதனால் உறுதியாகும் வரை மெளனம் காக்க வேண்டுமென கண்டிப்புடன் கூறினார்கள். அதன்பிறகு, விஜய் 66 குறித்து எந்த தகவலும் இல்லாமல் இருந்துவந்தது.

சமீபத்தில் இந்தச் செய்தி மீண்டும் சூடு பிடித்திருக்கிறது. இயக்குநர் வம்சியின் பிறந்த தினம் கடந்த 27ஆம் தேதி வந்தது. பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்தனர். அதில், ஒருவரின் வாழ்த்து வைரலானது. வம்சியின் நெருங்கிய நண்பர் பாடகர் கிரிஷ். அவர் ட்விட்டரில், ‘எனக்கு பிடித்த நபர் மற்றும் இயக்குநர் வம்சிக்கு பிறந்தநாள் வாழ்த்து. என் நண்பருக்கு இது அற்புதமான ஆண்டாக இருக்க வாழ்த்துகள். விஜய் அண்ணாவுடன் உங்களின் அடுத்த படைப்புக்காக காத்திருக்கிறேன்” என ட்விட் போட்டார்.

ஒற்றை ட்விட்டினால் இணையமே பற்றிக்கொண்டது. விஜய் 66 இயக்குநர் வம்சி என்பது மீண்டும் உறுதியாகிவிட்டதென ரசிகர்கள் டிரெண்ட் செய்ய தொடங்கினர்கள். அதன்பிறகு, நள்ளிரவிலேயே, பாடகர் கிரிஷ் பதிவிட்ட ட்விட்டை நீக்கிவிட்டார். கிரிஷிடம் போனில் அழைத்து வம்சி பேசியதாகவும், ட்விட்டை நீக்க சொன்னதாகவும் தெரிகிறது. இந்நிகழ்வினால், மீண்டும் விஜய் 66 இயக்குநர் யாரென்பதில் குழப்பம் நீடிக்கிறது.

விஜய்யை இயக்குவாரா வம்சி? புரியாத புதிராகவே நீடித்துக் கொண்டிருக்கிறது இந்த கேள்விக்கான பதில்.

**- தீரன்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *