கார்ட்டூன் சேனலும் சீரியல் சேனலும்: அப்டேட் குமாரு

entertainment

‘எங்க மிஸ் சரியா ஹோம் செய்ய மாட்டேங்குறாங்கடா’ அப்படினு ஒரு பொடுசு இன்னொரு பொடுசுக்கிட்ட ரொம்ப சுவாரசியமா சொல்லிக்கிட்டிருந்துச்சு. பால் வாங்கப் போன இடத்துல இது என்னடா வம்பாப் போச்சுனு அந்த பயலை மறிச்சி, ‘ஏண்டா உனக்குதானடா ஹோம் ஒர்க் கொடுப்பாங்க. நீ என்னடான்னா உன் மிஸ் ஹோம் ஒர்க் செய்யலைனு சொல்றியே?’னு ரொம்ப ஆவலா கேட்டேன்.

‘அது இல்லண்ணே… ஆன் லைன் கிஸாஸ்ல நான் அனுப்புற ஹோம் வொர்க்கை பார்த்து திருத்தி அனுப்பவே மாட்டேங்குறாங்க. வீட்ல அவங்களுக்கு இதான வேலை. நாங்க மட்டும் மாங்குனு மாங்குனு கார்ட்டூன் சேனல் கூட பாக்காம எழுதி அனுப்புறோம். ஆனா அவங்க சீரியல் பாத்துக்கிட்டு ஸ்டேட்டஸ் போடுறாங்களே தவிர, எங்க ஹோம் ஒர்க்கை பாக்க மாட்டேங்குறாங்க’னு அப்படியே ஒப்பிக்கிறான்.

டீச்சரம்மா நீ யார் பெத்த புள்ளயோ ஸ்கூல் தெறந்த பிறகு ஜாக்கிரதையா இரு

நீங்க அப்டேட்டை பாருங்க

**மயக்குநன்**

தமிழ்நாட்டில் படிப்படியாக இயல்பு நிலை திரும்ப அரசு முழு நடவடிக்கை!- முதல்வர்.

இப்பவே மாஸ்க் போடாம எல்லாரும் கூட்டம் கூட்டமாதான் சுத்திக்கிட்டு இருக்காங்க தெய்வமே..!

**நாகராஜ சோழன் MA.MLA**

தமிழகத்தில் ரவுடிகளை ஒழிக்க புதிய சட்டம் .- உயர்நீதிமன்றத்தில் காவல்துறை பதில்

அப்படியே காவல் நிலையத்தில் போலீசாரே கொலைகள் செய்யாமல் இருக்க புதிய சட்டமும் கொண்டுவாங்க…

**தர்மஅடி தர்மலிங்கம்**

”போரும் இல்லை, அமைதியும் இல்லை”- இந்திய விமானப்படை தளபதி பதாரியா!

ஆஹா! இப்படி ஆளாளுக்கு கமல் மாதிரியே பேசுனா எப்படி.??

**நாகராஜ சோழன் MA.MLA**

தமிழகத்தில் இன்று முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டம்.. முதலமைச்சர் தொடங்கிவைக்கிறார்.

பேஸ் மாஸ்க் எப்பையா தறுவீங்க?

நீங்க தர்றதுகுள்ள கொரோனா வே முடிஞ்சுரும் போல இருக்கே…

**கோழியின் கிறுக்கல்!!**

தமிழகத்தில் அக் 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு!!

தட் இத சட்னினு சொன்னா இட்லிக் கூட நம்பாது மொமண்ட்!!

**mohanram.ko**

நீங்க நினைக்கிற மாதிரி யாரையுமே கொல்லல. குளிர் காய எரிய போட்டிருக்காங்க. மொத்தத்துல, அங்கே ஒரு பெண்ணே இல்லைங்க

#hathras

**மயக்குநன்**

அதிமுக வலிமையாக மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும்!- வைத்திலிங்கம்.

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தாதான் வலிமையா இருக்குன்னே நம்புவோம் பாஸ்..!

**சரவணன். ℳ**

போலீசார் தன்னை கீழே தள்ளிவிட்டு லத்தியால் அடித்ததாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு.

ஒரு தேசிய கட்சியின் முக்கிய பிரமுகருக்கு இந்த நிலை என்றால் இனிமேல் சாதாரணமாக கருத்துக்கள் கூறுபவர்கள் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியே…

**கோழியின் கிறுக்கல்!!**

முதுகுக்கு பின்பு கேவலமாக பேசுபவன் துரோகி,

முகத்துக்கு முன்பு கழுவி, கழுவி ஊத்துபவன் நண்பன்!!

**லாக் ஆப்**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *