வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகும் திரைப்படங்களுக்குப் பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். கடைசியாக, தனுஷ் இயக்கத்தில் கடந்த வருட அக்டோபரில் அசுரன் வெளியானது. குறைவான பட்ஜெட்டில் உருவாகி, பெரிய வெற்றியும் பெற்றது.
இந்தப் படத்தைத் தொடர்ந்து வெற்றிமாறன் அடுத்தடுத்து இரண்டு படங்களை இயக்குவதற்குத் தயாராகிவந்தார். சூர்யா இயக்கத்தில் ‘வாடிவாசல்’ மற்றும் காமெடியன் சூரி கதாநாயகனான நடிக்கும் படத்தையும் இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதில், சூர்யா – வெற்றிமாறன் கூட்டணியில் ‘வாடிவாசல்’ படத்துக்கான ஸ்கிரிப்ட் பணிகளே இன்னும் முடியவில்லை என்று சொல்கிறார்கள். அதோடு, சூரி நடிக்கும் படமும் தொடங்குவதற்கான எந்த முகாந்தரமும் இல்லை என்பதே உண்மை.
இந்த நிலையில், வேறு படங்களுக்கு கமிட்டாகாமல் நீண்ட நாட்களாக வெற்றிமாறனுக்காகக் காத்துக்கொண்டிருக்கிறார் சூரி. இப்போது லேட்டஸ்ட் அப்டேட் என்னவென்றால், வெற்றிமாறன் புதிய படமொன்றை இயக்க தயாராகிவருகிறார் என்பதுதான். அந்தப் படத்தில் சூரி ஹீரோவாக நடிக்கிறார். அதோடு, சூரிக்கு இணையாக இன்னொரு முக்கிய லீட் ரோலில் நாயகனாக இயக்குநர் பாரதிராஜா நடிக்க இருக்கிறார்.
நாவல்களைத் திரைப்படங்களாக எடுப்பதில் வெற்றிமாறன் ஸ்பெஷலிஸ்ட். விசாரணை, அசுரன் போல, சூரி – பாரதிராஜா நடிக்கும் படமும் கூட, ஒரு பிரபல மூத்த எழுத்தாளரின் பழைய சிறுகதையை மையமாகக் கொண்டு உருவாகும் திரைப்படம் தானாம்.
அரசியல் சார்ந்த ஒரு பின்புலம் கொண்ட கதை. பழைய சிறுகதை என்பதால், இப்போதைய அரசியல் சூழலுக்கேற்ற வகையில் திரைக்கதையை தயார் செய்து வைத்திருக்கிறாராம் வெற்றிமாறன். அழுத்தமான அரசியல் திரைப்படமாக இருக்கும் என்றும் சொல்கிறார்கள். அதோடு, குறுகிய காலத்துக்குள் படத்தை எடுத்துவிடவும் திட்டம். விரைவிலேயே படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.
**ஆதினி**�,