வெந்து தணிந்தது காடு ரிலீஸ் தேதி!

entertainment

செப்டம்பர் 15ஆம் தேதி அன்று நடிகர் சிலம்பரசன் மற்றும் இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் உருவாகி உள்ள திரைப்படமான ‘வெந்து தணிந்தது காடு’ வெளியாக உள்ளது.
இந்த அறிவிப்பை மிகவும் வித்தியாசமாக டீசர் வடிவில் தெரிவித்துள்ளது படக்குழு. இந்தப் படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே.கணேஷ் தயாரித்துள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ள இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ‘காலத்திற்கும் நீ வேணும்’ பாடல் கவனம் ஈர்த்துள்ளது. பாடலாசிரியர் தாமரை அதற்கான வரிகளை எழுதி உள்ளார்.
விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா என இரண்டு திரைப்படங்களைத் தொடர்ந்து சிலம்பரசன், கவுதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் உருவாகி உள்ள மூன்றாவது திரைப்படம் வெந்து தணிந்தது காடு என்பது குறிப்பிடத்தக்கது.

**-இராமானுஜம்**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *